ரோஜா செடியில் அதிக பூக்கள் பூக்க என்ன செய்ய வேண்டும்
பொதுவாக வீட்டை சுற்றி பூச்செடி வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். பூச்செடி இருந்தாலே வீடு அழகாக இருக்கும். வீட்டை சுற்றி பூச்செடி வளர்க்க இடம் இல்லாவிட்டாலும் மாடியில் வளர்கின்றனர். அப்படி அதிகமாக வளர்க்கும் பூச்செடிகளில் ரோஜா செடி தான் முதலிடத்தை பிடித்திருக்கிறது. மேலும் பூச்செடிகளானது சில பேர் வீட்டில் அதிகமாக பூ பூக்கும், சிலரது வீட்டில் பூக்களே பூத்திருக்காது. இதனால் கவலை அடைவீர்கள். இனி கவலை வேண்டாம், ஏனென்றால் இந்த பதிவில் காய்ந்த ரோஜா செடியில் கூட அதிக பூக்கள் பூப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
காய்ந்த செடி கூட துளி விட கூடிய கரைசல்:
முதலில் ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொள்ளவும், அதில் மஞ்சள் தூள் 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். இதனை 8 மணி நேரத்திற்கு அப்படியே விடவும்.
8 மணி நேரம் கழித்து பார்த்தால் அந்த தண்ணீரானது புளித்த நிலையில் இருக்கும். இதனுடன் சாதம் வடித்த கஞ்சியை சேர்த்து கலந்து கொள்ளவும்.
இதனை செடிக்கு ஊற்றுவதன் மூலமாக ரோஜா செடியில் துளிர் விடும். மேலும் ரோஜா பூக்கள் அதிகமாக பூக்களும் பூக்கும்.
முல்லை பூச்செடியில் பூக்கள் பூத்து குலுங்க இதை மட்டும் ஊற்றினால் போதும்..
இந்த கரைசலை வாரத்திற்கு ஒரு முறை 200 ml அளவில் செடிக்கு கொடுக்க வேண்டும். இதனை காலை 7.30 மணிக்குள்ளும், மாலை 5.30 மணிக்குள்ளும் கொடுக்க வேண்டும்.
உரம்:
மண் கலவை, செம்மண், டீ தூள் கம்போஸ்ட் மூன்றையும் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனை செடிக்கு கொடுத்து நன்றாக கலந்து விட வேண்டும். நீங்கள் உரம் கொடுத்த 6-வது நாளில் செடிகளில் துளிர் விட ஆரம்பித்திருக்கும்.
உரத்தை கொடுப்பதற்கு முன் காய்ந்த கிளைகளை நறுக்கி விட வேண்டும்.
செம்பருத்தி செடியில் மொட்டு உதிராமல் அதிகமாக பூக்கள் பூக்க என்ன செய்ய வேண்டும்..
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |