வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தேனீ வளர்ப்பு – விரிவான விளக்கம் !!!

Updated On: August 9, 2023 11:57 AM
Follow Us:
beekeeping
---Advertisement---
Advertisement

தேனீ வளர்ப்பு (beekeeping) முறை பற்றிய விவரங்கள்..!

கூடுதல் வருமானத்தை பெறுவதற்கு விவசாயிகள், விவசாயம் சார்ந்த தேனீ வளர்ப்பை கையாளுகின்றனர். தேனீ’க்கள், மலர்த்தேனை சேகரித்து, தேனாக மாற்றி, அதை தேன் கூட்டில் சேமிக்கும். நீண்ட காலமாக, தேனை காட்டிலிருந்து சேகரிக்கும் வழக்கம் உண்டு. தேன் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு (beekeeping) ஒரு தொழிலாக முக்கியமடைந்துள்ளது. தேனீ வளர்ப்பில், தேன் மற்றும் மெழுகு, முக்கியமான வெளீயீட்டு பொருள்கள் ஆகும்.

சரி இந்த பகுதில் தேனீ வளர்ப்பு (beekeeping) முறையை பற்றி இப்போது நாம் தெளிவாக படித்தறிவோம் வாருங்கள்..!

தேனீ வளர்ப்பு (Beekeeping) முறையின் சிறப்பு அம்சங்கள்:

தேனீ வளர்ப்பு (beekeeping) பொறுத்தவரை குறைந்த நேரம், பணம் மற்றும் கட்டிட அமைப்பு போதுமானது.

குறைந்த மதிப்புள்ள விவசாய நிலங்களில், தேன் மற்றும் மெழுகினை தயாரித்திடலாம்.

தேனீ வளர்ப்பு, வேறு எந்த விவசாய செயலுக்கான வளங்களுடனும் போட்டியிடாது.
தேனீ வளர்ப்பு (beekeeping), சுற்று சூழலை மேம்படுத்த உதவும். பலவிதமான பூக்களுக்கு மகரந்த சேர்க்கைக்கு உதவுவதால் இந்த பயிர்களில், மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தேன், ஒரு அதிக ஊட்டச்சத்து நிறைந்த விரும்பத்தக்க உணவாகும். முந்தைய தேனீ சேகரிப்பு முறையில் தேன் கூடுகளை அழிப்பதால் பலவிதமான தேனீக்கள் அழிக்கப்பட்டு வந்தது. ஆனால் தேனீ வளர்ப்பை கையாளுவதன் மூலம், இதை நாம் தடுக்கலாம்.

தேனீ வளர்ப்பு (Beekeeping) தனி நபராலோ அல்லது குழுவாகவோ தொடங்கப்படலாம்.

தேன் மற்றும் மெழுகிற்கு சந்தையில் தேவை இருக்கிறது.

தேன் வளர்ப்பு முறைக்கு தேவைப்படும் பொருட்கள்:

தேனீ வளர்ப்பு (beekeeping) பொறுத்தவரை வீட்டில் இருந்தோ அல்லது பண்ணையிலோ வளர்க்கலாம். அதற்கு தேவைப்படும் உபகரணங்களை பற்றி இப்போது அறிந்துகொள்வோம் வாங்க..!

தேனீ கூடு:

இது, ஒரு நீளமான சாதாரண பெட்டியாகும். இதன் மேல் வாட்டில், பல அடுக்குகளை கொண்டுள்ளது. தோராயமாக 100 செ.மீ நீளம், 45 செ.மீ அகலம் மற்றும் 25 செ.மீ உயரத்தை உடையது. இந்த பெட்டியின் மொத்தம் 2 செ.மீ ஆகும். தேனீக்கள் உள்ளே நுழைவற்கு 1 செ.மீ அகலமுடைய ஓட்டைகளை கொண்டுள்ளது. மேல் அடுக்குகள் அடர்ந்த தேன் கூட்டை அமைப்பதற்கு தேவையான மொத்தத்தை பெற்று இருக்க வேண்டும். சுமார் 1.5 செ.மீ மொத்தம் இதற்கு போதுமானது. தேனீக்கள் தேன் கூட்டை கட்ட ஏதுவாக, அடுக்குகளுக்கிடையேயான இடைவேளி 3.3 செ.மீ இருத்தல் நல்லது.

புகைப்பான்:

இது தேனீ வளர்ப்பில், இரண்டாவது முக்கிய உபகரணம் ஆகும். இதை, சிறிய தகரடப்பாவில் இருந்து செய்து கொள்ளலாம். இதனை தேனீக்களை கட்டுபடுத்துவதற்கும் மற்றும் தேனீக்கள் நம்மை கடிக்காமல் இருப்பதற்கும் பயன்படுத்தலாம்.

மேலும் துணி நாம் வேலைசெய்யும் போது, நம் கண்கள் மற்றும் முகத்தை பாதுகாத்து கொள்ள கட்டாயமாக முகத்தில் ஒரு துணியை கட்டி கொள்ள வேண்டும்.

மேலும் கத்தி, இராணி தேன் பிரிப்பான் மற்றும் தீப்பெட்டி ஆகிய உபகரணங்கள் தேவைப்படும்.

தேனீக்களின் இரகங்கள்:

தேனீ வளர்ப்பில் பலவகையான தேனீக்கள் உள்ளன அவைகள்.

மலை தேனீ (ஏபிஸ் டார்சேடா) :

இவை சிறந்த தேன் சேகரிக்கும் வகைகள். சராசரியாக, ஒரு காலனிக்கு 50-80 கிலோ தேன் கிடைக்கும்.

சிறு தேனீ (ஏபிஸ்ப்லோரியா) :

ஓரு காலனியில், 200 – 900 கிராம் தேனை சேகரிக்கும் வகைகள்

இந்தியத் தேனீ (ஏபிஸ் செரானா இன்டிகா):

இவை சராசரியாக தேனை சேகரிக்கும் வகை. ஒரு வருடத்தில், தலா ஒரு காலனியில், 6 -8 கிலோ தேனை சேகரிக்கும்.

ஐரோப்பா தேனீ (ஏபிஸ் மெல்லிபஃரா) :

சராசரியாக ஒரு காலனிக்கு 25-40 கிலோ தேனை சேகரிக்கும்.

கொடுக்கற்ற தேனீ (ட்ரைகோனா இரிடிபெனிஸ்):

மேலே கொடுக்கப்பட்டுள்ளவைகள் இல்லாமல், கேரளாவில் கொடுக்கற்ற தேனீ வகைகள் உள்ளன. இவைகளுக்கு, கொடுக்குகள் சரியான முறையில் வளர்ந்து இருக்காது. மகரந்த சேர்க்கையில் அதிக திறன் கொண்டவைகள். இவைகள் ஒரு வருடத்திற்கு, 300-400 கிராம் தேனை சேகரிக்கும்.

தேன் கூடு அமைக்கும் முறை:

தேன் வளர்க்கும் இடமானது, நல்ல வடிகால் வசதியையுடைய திறந்த இடங்களாகவும், குறிப்பாக பழத்தோட்டத்திற்கு அருகாமையிலும், மேலும் நிறைய மதுரம், மகரந்தம் மற்றும் நீர் கிடைக்கக்கூடிய இடமாகவும் இருக்க வேண்டும்.

சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு மிக அவசியமானதாகும். ஏனெனில் அப்பொழுதுதான், மிதமான வெப்பத்தை கொடுக்க இயலும்.

தேன் கூட்டிற்குள் எறும்பு ஏருவதை தடுக்க தேன் கூட்டின் கால்கள் தண்ணீருள்ள சிறு பாத்திரத்தில் நனையுமாரு இருத்தல் வேண்டும்.

வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்கும் வகையில் தேனீக்களின் காலனிகளை, கிழக்கு திசை நோக்கி அமையுமாரு தேன் கூட்டை அமைக்க வேண்டும்.

தேனீக்களின் காலனிகளை, கால்நடைகள், ஏனைய விலங்குகள் , பரபரப்பான வீதிகள் மற்றும் தெரு விளக்குகள் இவைகளிலிருந்து தூரத்தில் அமைக்க வேண்டும்.

தேனீ வளர்ப்பு (Beekeeping) முறையில் காலனிகளை அமைக்கும் முறை:

தேனீ காலனிகளை அமைக்க இயற்கையான கூட்டில் உள்ள தேனீக்களை மாற்றவோ அல்லது வழி செல்லும் தேனீக்களை கவரவோ செய்ய வேண்டும்.

இதற்கு முன்பு, பெட்டிகளை பழைய கூட்டின் உதிரிகளை கொண்டோ அல்லது தேனீ மெழுகினைக் கொண்டோ தடவினால் பெட்டியானது தேனீக்களுக்கு பழக்கப்பட்ட வாசனையை உடையதாக அமைக்கப்படும். முடிந்தால், இராணீ தேனீயை பிடித்து கூட்டினுள் வைத்தால், இது ஏனைய தேனீக்களை கவர்ந்து இழுக்கும்.

சில வாரங்களுக்கு பாதி கப் சுடுநீரில் பாதி கப் சர்க்கரையை கலந்து தேனிக்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் பெட்டியுனுள், வேகமாக கூட்டினை கட்ட இயலும்.

அதே போல் அதிக நெரிசலை தவிர்க்கவும்.

தேனீ வளர்ப்பு (Beekeeping) முறையின் அறுவடை:

தேனீ வளர்ப்பு (beekeeping ) முறை பொறுத்தவரை எந்த பகுதிகள் அறுவடைக்கு தயாராக உள்ளதோ, அந்த பகுதில் புகையை அடித்து, தேனீக்களை விரட்டி அறுவடை செய்ய வேண்டும்.

பொதுவாக, இரண்டு முக்கிய பூக்கும் காலங்களான அக்டோபர்/நவம்பர் மற்றும் பிப்ரவரி – ஜூன் மாதங்களிலும், அதற்கு சற்றே பின்பு வரும் மாதங்களிலும் அறுவடை செய்யலாம்.

காளான் சாகுபடி – விரிவான விளக்கம்!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

எந்த பூச்செடியாக இருந்தாலும் சரி அதில் பூக்கள் அதிகமாக பூக்க இதை மட்டும் செய்யுங்க..!

Malligai Plant Growing Faster in Tamil

ஒரே ஒரு வாழைக்காய் போதும்.. பூக்காத மல்லிகை செடியும் கிலோக்கணக்கில் பூத்து குலுங்கும்..!

Maavu Poochi Viratta Tips in Tamil

செடிகளில் உள்ள மாவுப்பூச்சியை நிரந்தரமாக போக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

பலாப்பழம் அதிகமாக காய்க்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

முலாம்பழம் சாகுபடி

கோடைகால முலாம்பழம் சாகுபடி – நல்ல வருமானம் கொடுக்கும்

ஜாதிக்காய் சாகுபடி

ஜாதிக்காய் சாகுபடி எப்படி செய்வது.? மற்றும் ஜாதிக்காய் பயன்கள்..!

Paneer Rose Plant Growing Tips

பன்னீர் ரோஸ் செடி கொத்து கொத்தாக பூ பூக்க உரம்..! Paneer Rose Plant Growing Tips..!

Aloe Vera To Grow Faster Fertilizer in Tamil

இந்த வெயில் காலத்திலும் கற்றாழை செடி தளதளன்னு வளர இந்த தண்ணீர் போதும்..!

summer care of rose plant in tamil

வெயில் காலத்தில் ரோஜா செடியில் இலைகளும் பூக்களும் அதிகம் பூக்க இதை செய்யுங்கள்..!