முருங்கை மரத்தில் பூச்சிகளை விரட்டி பூக்கள் உதிராமல் இருக்க மஞ்சளை இப்படி பயன்படுத்துங்க..!

Advertisement

How to Stop Drumstick Flower Shedding 

தினமும் நம்முடைய வீட்டில் சமைக்கும் காய்கறிகளில் முருங்கை காய் என்பது கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில் முருங்கை காய் என்பது பலருக்கும் பிடித்தமான ஒரு காயாகவும் இடம் பெற்றிருக்கிறது. ஆரோக்கியத்தில் முருங்கை மரத்தில் உள்ள அனைத்து பாகங்களும் மிகவும் நன்மை அளிக்கும் விதமாக உள்ளது. இவ்வாறு இருக்கையில் நிறைய நபர்களின் வீட்டில் இப்படி சிறப்புகள் கொண்ட முருங்கை மரம் ஆனது வளர்க்கப்படுகிறது. அந்த வகையில் சிலரது வீட்டில் உள்ள முருங்கை மரத்தில் காய்கள் மற்றும் பூக்கள் என்பதே இல்லாமல் இருக்கும். அதுமட்டும் இல்லாமல் பூச்சிகளின் தொல்லையும் அதிகமாக இருக்கும். இப்படியே இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருந்தால் முருங்கை மரத்தில் ஒரு பூக்கள் மற்றும் காய்கள் கூட இல்லாமல் போய் விடும் நிலைமை ஏற்பட்டு விடும். ஆகவே இன்று முருங்கை மரத்தில் பூச்சிகளின் தொல்லையினை நீக்கி நிறைய பூக்கள் மற்றும் காய்கள் காய்க்க என்ன செய்ய வேண்டும் என்று தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

பூக்காத செம்பருத்தி பூச்செடியில் கூட அதிக அளவு பூக்கள் போக்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்

முருங்கை மரத்தில் பூச்சிகளின் தொல்லை நீங்க:

நம்முடைய வீட்டில் எந்த மரம் இருந்தாலும் அதில் ஏதோ ஒரு வகையான பூச்சிகள் ஆனது இருந்து கொண்டே தான் உள்ளது. ஆரம்பத்தில் பூச்சிகள் வருவது என்பது சாதாரணமாக இருந்தாலும் கூட அதன் பிற அது மரத்தில் பூக்கள் மற்றும் காய்கள் காய்ப்பதை தடுத்து நிறுத்தி விடுகிறது.

இவ்வாறு பூச்சிகள் வருவதை தடுத்து பூக்கள் மற்றும் காய்கள் நிறைய காய்ப்பதற்கான கரைசலை தயாரித்து எப்படி பயன்படுத்துவது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • மஞ்சள் தூள்- 1 ஸ்பூன் 
  • பெருங்காயம் தூள்- 1 ஸ்பூன் 
  • வெப்பம் புண்ணாக்கு- சிறிதளவு 
  • தண்ணீர்- 1 லிட்டர்

கரைசல் தயாரிக்கும் முறை:

முருங்கை பூ உதிர்வதை தடுக்க

முதலில் ஒரு பவுலில் சிறிதளவு வேப்பம் புண்ணாக்கினை இரவு முழுவதும் ஊற வைத்து விடுங்கள். அதன் பிறகு மறுநாள் காலையில் மற்றொரு பாத்திரத்தில் வேப்பம் புண்ணாக்கு தண்ணீரை ஊற்றி கொள்ள வேண்டும்.

அடுத்து அந்த தண்ணீருடன் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 ஸ்பூன் பெருங்காயம் தூளினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இப்போது கலந்து வைத்துள்ள கரைசலை 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளுங்கள்.

அதன் பிறகு தயார் செய்து வைத்துள்ள கரைசலை முருங்கை மரத்தின் அனைத்து இடங்களிலும் தெளித்து விட வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்வதன் மூலம் பூச்சிகளின் தாக்கத்தில் இருந்து முருங்கை மரத்தை பராமரித்தால் பூக்கள் உதிர்வு நின்று மரத்தில் நிறைய முருங்கை காய்கள் காய்க்க ஆரம்பித்து விடும்.

இத்தகைய முறையினை பின்பற்றியதோடு வாரத்தில் 1 நாளில் புளித்த மோர் அல்லது மாவினை செடிகளின் மீது தெளித்து விடுவதன் மூலம் கட்டுக்கடங்காத அளவில் முருங்கை பூக்கள் பூக்கும்.

காய்க்கவே காய்க்காத முருங்கை மரத்தில் கூட அதிக காய்க்கள் காய்க்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க 

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement