மாதுளை மரத்தில் பூக்கள் உதிர்ந்து கொண்டே இருந்தால் இதை மட்டும் தண்ணீரில் கலந்து ஊற்றினால் போதும்…!

Advertisement

How to Stop Pomegranate Flowers From Falling 

மாதுளை பழம் என்பது நம் உடலுக்கு மிகவும் நன்மையினை அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக மாதுளை பழம் உடலுக்கு இரத்தினையும், பெண்களுக்கு தேவையான இரும்புச்சத்தினையும் அளிக்கிறது. இத்தகைய மாதுளை பழத்தினை நாம் அதிகமாக வீடுகளில் வளர்ப்பது இல்லை. அதற்கு பதிலாக கடைகளில் விற்கும் மாதுளை பழத்தினை தான் வாங்கி கொள்கின்றோம். ஆனால் ஒரு சிலர் மாதுளை பழ மரத்தினை வீட்டிலேயே வளர்த்து அதில் இருந்து கிடைக்கக்கூடிய பழத்தினை கடைகளில் விற்பனை செய்து வருகிறார்கள். இவ்வாறு விற்பனை செய்வதும் மிகவும் கடினம். ஏனென்றால் மாதுளை மரத்தில் பூக்கள் உதிர்வு என்பது நிறைய நபருக்கு ஏற்படக்கூடிய ஒன்றாக உள்ளது. அதனால் இத்தகைய பிரச்சனைக்கு உதவும் வகையில் மாதுளை மரத்தில் பூக்கள் உதிர்வை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

வாழைத்தார்களில் அதிக காய்கள் காய்க்க இதை மட்டும் ஊற்றுங்கள் போதும் 

மாதுளை பூ உதிர்வதை தடுக்க:

உங்களுடைய மரத்திற்கு சரியான உரம் மற்றும் தண்ணீரை அளிக்கவில்லை என்றாலும் மாதுளை மரத்தில் பூக்கள் உதிர்வு என்பது இருக்கும்.

அதனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள கரைசலை மரத்திற்கு அளிப்பதன் மூலம் பூக்கள் உதிர்வை தடுக்கலாம்.

மாதுளை பூ உதிர்வதை தடுக்க

  • தண்ணீர்- 9 லிட்டர் 
  • குளியல் தண்ணீர்- 1 லிட்டர்

மேலே சொல்லப்பட்டுள்ள தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு இந்த இரண்டு நீரினையும் வாலியல் நன்றாக கலந்து மாதுளை மரத்தின் வேரில் நன்றாக படுமாறு ஊற்றினால் போதும் பூக்கள் உதிர்வு குறைய ஆரம்பித்து விடும்.

மாதுளைக்கு உரம்:

அதேபோல் மாதுளை மரத்தில் பூக்கள் பூக்க ஆரம்பித்தவுடன் காய்கள் காய்ப்பதற்கு நீங்கள் உரத்தினை அளிக்க வேண்டும். அதாவது 2 லிட்டர் தண்ணீரில் 10 மில்லி பஞ்சகாவியம் எடுத்துக்கொண்டு அதனை நன்றாக கலந்து பின்பு மாதுளை மரத்திற்கு உரமாக அளிக்க வேண்டும்.

இத்தகைய உரத்தினை அளிப்பதன் மூலம் மாதுளை மரத்தில் காய்களும் விரைவாக காய்க்க ஆரம்பித்து விடும்.

பலா மரத்தில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்க இதை மட்டும் ஊற்றுங்கள் போதும்

பூச்சி தாக்குதல்:

மாதுளை பூ உதிர்வு

மாதுளை மரத்தில் பூச்சிகளின் தாக்குதல் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் பழ மற்றும் காய்கறி கழிவுகளை உரமாக அளிக்கலாம். அதேபோல் சாம்பலை தண்ணீருடன் கலந்து உரமாக அளிக்கலாம்.

மேலும் இலை, தழைகளையும் உரமாக அளிக்கலாம். இந்த மூன்றில் நீங்கள் எதை வேண்டுமானாலும் உரமாக அளிப்பதன் மூலம் மரத்திற்கு தேவையான நார்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டசியம் சத்து கிடைத்து பூச்சி தாக்குதல் இல்லாமல் இருக்கும்.

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement