அருமையான பூக்களுக்கு
இன்றைய கால கட்டத்தில் அனைவருமே வீட்டு தோட்டம் அமைப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பூச்செடிகள் வளர்ப்பதில் அதிக ஈடுபாடுடன் காணப்படுகின்றனர். அப்படி நாம் விரும்பி வளர்க்கும் பல வகையான பூச்செடிகளில் இந்த ரோஜா பூச்செடியும் ஒன்று. நாம் மிகவும் விரும்பி வளர்க்கும் ரோஜா பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூக்கவில்லை என்றால் நமது மனம் மிகவும் கவலைப்படும். அப்படியென்றால் இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் இருக்கும் ரோஜா செடியில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுவதுமாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கொத்து கொத்தாக பூ பூக்க:
ரோஜா செடியில் பூக்கள் அதிகமாக பூக்க:
வேண்டாம் என்று ஒதுக்கும் உணவுப்பொருட்களை நமது வீட்டு தோட்டத்திற்கு பயன்படுத்தினால் அது நல்ல வளர்ச்சியை தரும்.
ரோஜா செடியில் பூக்கள் அதிகமாக பூக்க என்ன செய்ய வேண்டும்?
தேவையான பொருட்கள்:
- டீ தூள்
- அரிசி கழுவிய தண்ணீர்
- மூட்டை ஓடு
- காய்கறி மற்றும் பழ கழிவுகள்
- தண்ணீர்
செய்முறை:
நாம் தினமும் பயன்படுத்தும் டீ தூள் மிச்சத்தை சேமித்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 2 மணி நேரங்கள் ஊறவிட வேண்டும்.
அரிசி சுத்தம் செய்யும் தண்ணீரையும் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் வெங்காயம் தோல் காய்கறி கழிவுகள் மற்றும் முட்டை ஓடுகளை சேமித்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஊறவைக்க வேண்டும்.
பின்னர் அந்த ஊற வைத்தவற்றை நன்றாக கொதிக்க விடவும். அந்த கலவையில் உள்ள சாறுகள் தண்ணீரில் இறங்கி அதன் நிறம் மாறுபடும்.
அவை நன்றாக கொத்தித்து வந்த பின்னர் அதனை வடிகட்டி நன்றாக ஆற விடவும். அதனுடன் டீ தூள் தண்ணீர் மற்றும் அரிசி தண்ணீர் சேர்த்து மாலை நேரங்களில் உங்கள் ரோஜா செடிகளில் சேர்ப்பதால் உங்கள் செடிடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்வதன் மூலம் உங்கள் ரோஜா செடிகளில் பூச்சிகள் தொல்லைகள் நீங்கி கொத்து கொத்தாக பூக்கள் பூத்து குலுங்கும்.
பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருட்களை கொண்டு உங்க ரோஜா செடியை கொத்து கொத்த பூக்க வைக்கலாம்.
உங்களுக்கு பிடித்த மணி பிளாண்டை எவ்வாறு கவனமாக வளர்ப்பது என்று தெரியுமா…..
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |