உங்க வீட்டு பலா மரம் காய்க்காமலே இருக்கிறதா.? அப்போ இதை மட்டும் பண்ணுங்க.. கொத்து கொத்தாக காய்க்கும்.!

Advertisement

How Best to Grow Jackfruit in Tamil | பலா மரம் காய்க்க என்ன செய்ய வேண்டும்

பலாப்பழம் பொதுவாக வெப்பமண்டல தாழ்நிலங்களில் வளரக்கூடியது. இது இந்தியா உட்பட பல வெப்பமண்டல நாடுகளில் அதிகமாக பயிரிடப்படுகிறது. இது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. பழுத்த மற்றும் பழுக்காத இரண்டு பழங்களும் உணவாக  உட்கொள்ளப்படுகின்றன. ஒரு முதிர்ந்த பலா மரம் ஒரு வருடத்திற்கு 500 பழங்களை தருகிறது.

இதனின் இனிப்பு சுவையின் காரணமாக பெரும்பாலான வீடுகளில் பலாமரம் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆனால் சில மரங்கள் பல வருடங்கள் ஆகியும் காய்கள் வைக்காமல் வளர்ந்து கொண்டே இருக்கும். பெரும்பாலும், நெறைய வீடுகளில் பலாமரம் பல வருடங்களாக காய்க்காமல் தான் இருக்கும். அப்படி இருக்கும் பலா மரங்களுக்கு நாம் சரியான உரத்தினை இட வேண்டும். அதனை பற்றி தான் பின்வருமாறு பார்க்கப்போகிறோம். ஓகே வாருங்கள் இவ்வகை மரங்கள் காய் காய்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம்.

How To Get More Jackfruit in Tamil:

 how best to grow jackfruit in tamil

  • பலாமரத்திற்கு, ஒரு வருடத்திற்கு ஒரு முறை தொழுஉரம் 10 கிலோ என்ற அளவில் கொடுக்க வேண்டும். அதாவது ஆட்டு எருது, மாட்டு எருது மற்றும் அவற்றின் சிறுநீர் மற்றும் தாவர கழிவு போன்றவற்றை கலந்து கொடுக்க வேண்டும்.
  • மேலும் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து போன்றவற்றை கலந்து 1 கிலோ அளவில் உரமாக கொடுக்க வேண்டும்.
  • ஆறு வருடங்களுக்கு பிறகு தொழுஉரத்தை 50 கிலோ என்ற அளவிலும், தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து போன்றவற்றை கலந்து 2 கிலோ என்ற அளவிலும் கொடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் மாநில மரம் எதுன்னு தெரியுமா..?

  • பலா மரத்திற்கு அதிகமான அளவில் தண்ணீர் ஊற்றுதல் கூடாது. அதிக வெப்பம் உள்ள நாட்களில் மட்டுமே பலா மரத்திற்கு அதிக தண்ணீர் இட வேண்டும்.
  • உரங்களை மே, ஜூன் மாதங்களில் ஒரு முறையும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஒரு முறை என இரண்டு முறை பிரித்து இட வேண்டும்.
  • பலா மரங்களுக்கு நல்ல சூரிய ஒளி கிடைக்குமாறு அதன் பக்கவாட்டு கிளைகளை வெட்டி விட வேண்டும். அப்பொழுதான் காய்கள் காய்க்க தொடங்கும். மேலும், அதிகமான காய்களையும் கொடுக்கும்.
  • இவ்வாறு நீங்கள் பராமரித்து வந்தால் பலாப்பழம் கொத்து கொத்தாக காய்க்க தொடங்கும்.
  • ஒரு கொத்தில் இரண்டு காய்கள் மட்டும் இருந்தால் தான் பலாப்பழம் நன்கு பெரிதாக வளரும். எனவே ஒரு கொத்தில் அதிக காய்கள் இருந்தால் அதிகபட்சமாக 3 காய்களை வைத்துவிட்டு மீதமுள்ள பிஞ்சுகளை அகற்றி விடுங்கள்.

பலாப்பழம் பயிரிடும் முறையும் அதன் பயன்களும்..!

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

Advertisement