மல்லிகை செடி தாறுமாறாக பூக்க
வணக்கம் நண்பர்களே..! பெரும்பாலும் நம் அனைவருக்குமே வீட்டை சுற்றில் அழகழகாக செடிகள் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். செடிகள் வளர்ப்பதும் ஒரு விவசாயம் தான். பொதுவாக கிராமம் என்று பார்த்தால் அங்கு விவசாயம் மட்டும் தான் இருக்கும். ஆனால் சிட்டியில் மரங்கள் பார்ப்பது கூட கஷ்டமாக இருக்கிறது. இப்படி கவலைப்படும் வேளையில் தான் மாடி தோட்டம் என்று ஓன்று வந்தது. அதில் செடிகள், கொடிகள், மரங்கள் என்று அனைத்துமே வளர்க்க ஆரம்பித்து விட்டோம். இவ்வளவு ஏன் மாடித்தோட்டத்தில் சிறு விவசாயமே செய்து வருகின்றோம். பெரும்பாலும் நம்மில் பலருக்கும் பூச்செடிகள் வளர்க்க தான் ஆசையாக இருக்கும். அப்படி வளர்க்கும் பூச்செடிகளில் மல்லிகை செடியும் ஓன்று. ஆனால் மல்லிகை செடி சில வீடுகளில் அவ்வளவு வேகமாக வளர்ந்து விடாது. அதனால் இந்த பதிவில் மல்லிகை செடி வேகமாக வளர்ந்து மொட்டுக்கள் அதிகமாக வைக்க டிப்ஸ் பற்றி பார்க்கலாம் வாங்க.
காய்ந்த ரோஜா செடியும் 5 நாட்களில் துளிர்விட்டு பூக்கள் பூத்து குலுங்க வாழைப்பழம் மட்டும் போதும்
மல்லிகை செடியில் மொட்டுக்கள் தாறுமாறாக வைக்க டிப்ஸ்:
மல்லிகை செடி இருக்கும் மண்ணை அடிக்கடி கிளறி விடவேண்டும். மண் கட்டியாக இருந்தால் வேர்களில் வளர்ச்சி இல்லாமல் செடியும் வளராமல் போய்விடும். அதனால் 15 நாட்களுக்கு 1 முறையோ அல்லது மாதத்திற்கு 1 முறையோ மண்ணை நன்றாக கிளறி விடவேண்டும்.
அடுத்து மல்லிகை செடிக்கு மாட்டு உரம் போல ஏதும் உரம் கொடுக்கும் போதும், மண்ணை கிளறி உரம் கொடுக்க வேண்டும். அப்போது தான் உரத்தில் இருக்கும் சத்துக்கள் செடியின் வேர்களுக்கு செல்லும்.
அதுபோல மல்லிகை செடிக்கு காலை மாலை என்று 2 வேளையும் தண்ணீர் ஊற்ற வேண்டும். இதுபோல பராமரித்து வந்தால் மல்லிகை செடி நன்றாக வளரும்.
பூக்கவே பூக்காத செம்பருத்தி செடியும் பூத்து குலுங்க 1 துண்டு இஞ்சி போதும்
மொட்டுக்கள் தாறுமாறாக வைக்க டிப்ஸ்:
முதலில் ஒரு கிண்ணத்தில் சிறிதளவு அரிசி எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் வரை அப்படியே ஊறவிடுங்கள். பிறகு அதை கழுவி அந்த நீரை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.
இப்போது இந்த நீரை காலை மற்றும் மாலை வேளையில் மல்லிகை செடிக்கு ஊற்றி வந்தால் மல்லிகை செடியில் மொட்டுக்கள் தாறுமாறாக வைத்து பூக்கள் பூத்து குலுங்கும்.
ஏனென்றால் அரிசி கழுவிய நீரில் பொட்டாசியம், நியூட்ரோஜன் போன்ற சத்துக்கள் இருப்பதால் செடி நன்றாக வளர்ந்து பூக்கள் அதிகமாக பூக்கும்.
பூக்காத செம்பருத்தி செடியிலும் மலர்கள் பூத்து குலுங்க 1 ஸ்பூன் வெந்தயம் போதுமே
குச்சியாக இருக்கும் ரோஜா செடி கூட 3 நாட்களில் துளிர்விட்டு மொட்டுகள் வைக்க இந்த ஒரு கரைசல் போதும்
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |