ஒரே வாரத்தில் ஜாதி மல்லி செடியில் அதிகமாக மொட்டுகள் வைக்க இதை ட்ரை பண்ணுங்க.!

Advertisement

Jathi Malli Chedi Valarpathu Eppadi

இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் பூக்கள் என்பது அதிகமாக பிடிக்கும். அந்த வகையில் பார்த்தால் சிலருக்கு வாசனை அதிகமாக உள்ள பூக்கள் பிடிக்கும். மற்ற சிலருக்கு பூக்கள் பிடிக்கும் ஆனால் அதில் இருந்து வரும் வாசனை மட்டும் பிடிக்காது. இப்படி இருக்கும் பட்சத்தில் பூக்களிலே அதிகமாக வாசனை கொண்டுள்ள பூ என்றால் ஒன்று முல்லை பூ, மற்றொன்று ஜாதி மல்லிப்பூவாகும். இத்தகைய இரண்டும் நமக்கு அதிகமாக பிடித்தாலும் கூட தலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் போது செடியில் பூக்களே இருக்காது. அதனால் இன்று வீட்டில் வளர்த்து வரும் ஜாதி மல்லி செடியில் மொட்டுக்கள் அதிகமாக வைக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிந்துகொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஜாதிமல்லி செடி வளர்ப்பு:

ஜாதி மல்லி செடியினை முதலில் நீங்கள் நடவு செய்த பிறகு அதற்கு சரியான முறையில் தண்ணீர் விட்டு ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு ஜாதி மல்லி செடியில் இருக்கும் காய்ந்த இலைகளை நீக்கி விட வேண்டும்.

அதேபோல் வீட்டில் இருக்கும் அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் காய்கறி கழிவுகள் உங்களுக்கு எப்போது எல்லாம் கிடைக்கிறதோ அப்போது எல்லாம் செடிகளுக்கு அளித்து வாருங்கள்.

உரம் அளிக்கும் முறை:

 ஜாதிமல்லி செடி வளர்ப்பு

ஜாதி மல்லி பூ செடியில் மொட்டுகள் அதிகமாக வைக்க வேண்டும் என்றால் கடலை புண்ணாக்கு அல்லது வேப்ப புண்ணாக்கு கலந்த தண்ணீரை செடிகளுக்கு உரமாக கொடுக்க வேண்டும்.

இத்தகைய கரைசலை செடிகளுக்கு கொடுப்பதன் மூலம் செடி நன்றாக துளிர் விட்டு வளர்ந்து மொட்டுகள் அதிகமாக வைக்க ஆரம்பிக்கும்.

3 நாட்களில் செம்பருத்தி செடி துளிர்விட்டு மொட்டுகள் வைக்க இதை ட்ரை பண்ணுங்க 

ஜாதிமல்லி செடி பூச்சி:

ஜாதிமல்லி செடி பூச்சி

உங்களுடைய தோட்டத்தில் உள்ள ஜாதி மல்லிப்பூ செடியினை பூச்சிகள் எதுவும் தாக்காமல் இருக்க மாதத்திற்கு ஒரு சிறிதளவு வேப்பிலை கலந்த தண்ணீர் அல்லது சுண்ணாம்பு கலந்து தண்ணீரை கொடுப்பதன் மூலம் பூச்சிகள் எதுவும் தாக்காமல் இருக்கும்.

ஆகவே நீங்கள் இத்தகைய முறையில் நீங்கள் ஜாதி மல்லி பூ செடியினை பராமரித்து வருவதன் மூலம் செடி நிறைய மொட்டுகள் வைத்து பூக்கள் அதிகமாக பூக்க ஆரம்பித்து விடும்.

ஒரே ரோஜா செடியில் நிறைய பூக்கள் பூக்க என்ன பண்ணனும் தெரியுமா…

புதிதாக நட்ட ரோஜா செடிகள் சீக்கிரம் துளிர்விட இத பண்ணலாமா…

செம்பருத்தி செடியில் 7 நாட்களில் பூக்கள் தாறுமாறாக பூக்க இத Try பண்ணி பாருங்க…..

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement