Jathi Malli Poo Chedi Valarpu
இன்றைய சூழலில் அனைவரின் வீடுகளிலும் ஒரு சிறிய அளவிலான தோட்டம் அல்லது மாடி தோட்டத்தை அமைத்து அதில் பலவகையான செடிகளை வளர்த்தாலும் நமது வீடுகளில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே மிக மிக பிடித்து வளர்க்கும் செடிகள் என்றால் அது பூச்செடிகள் தான். ஏனென்றால் பூச்செடிகள் என்றால் அனைவருக்குமே பிடிக்கும். அப்படி நாம் மிக மிக அதிக அளவு விரும்பி வளர்க்கும் பூச்செடிகளில் ஒன்று தான் இந்த ஜாதி மல்லி செடி.
இதனை பலரும் விரும்பி தங்களது வீடுகளில் வளர்ப்பார்கள். ஆனால் இது ஒரு சில குறிப்பிட்ட காலங்களுக்கு மட்டும் பூத்துவிட்டு அதன் பிறகு முற்றிலும் பூக்காமல் செடி வாடிவிடும். அதனால் தான் இன்றைய பதிவில் வருடம் முழுவதும் ஜாதி மல்லி பூச்செடி பூத்து குலுங்குவதற்கு உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஜாதிமல்லி செடி வளர்ப்பு முறை:
பொதுவாக ஒரு செடி நன்கு வளர வேண்டும் என்றால் அதற்கு முதலில் தேவைப்படுவது சிறந்த மண்கலவை தான். அதாவது 40% சாதாரண மணல், 30% கம்போஸ்ட், 20% கோகோ பீட் மற்றும் 10 % ஆற்றுமணல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து ஒரு மண்கலவையை தயாரித்து அதனை நமது ஜாதி மல்லி செடிகளின் மண்கலவையாக வைத்தால் அது நன்கு வளரும்.
அடுத்து ஒரு செடி நன்கு வளர வேண்டும் என்றால் அதற்கு முக்கியமாக தேவைப்படுவது சூரிய ஒளி தான். அதனால் நீங்கள் இந்த ஜாதிமல்லி செடியை 3 முதல் 6 மணிநேரம் சூரிய ஒளிப்படுகின்ற இடத்தில் வைத்து வளர்ப்பது நல்லது.
இதை 1 கிளாஸ் ஊற்றுங்கள் பூக்காத முல்லை பூச்செடி கூட கிலோ கணக்கில் பூக்கள் பூக்கும்
உரத்திற்கு தேவையான பொருட்கள்:
- அரிசி கழுவிய தண்ணீர் – 2 லிட்டர்
- வெங்காய தோல் – 1 கைப்பிடி அளவு
- பூண்டு தோல் – 1 கைப்பிடி அளவு
- வாழைப்பழத்தோல் – 2
- காபி தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- வெல்லம் – 1 சிறிய துண்டு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 லிட்டர் அரிசி கழுவிய தண்ணீரை ஊற்றி அதில் 1 கைப்பிடி அளவு வெங்காய தோல், 1 கைப்பிடி அளவு பூண்டு தோல், 2 வாழைப்பழத்தோல், 2 டேபிள் ஸ்பூன் காபி தூள் மற்றும் 1 சிறிய துண்டு வெல்லம் ஆகியவற்றை சேர்த்து மூன்று முதல் நன்கு நாட்களுக்கு நன்கு ஊறவிடுங்கள்.
பின்னர் அதில் உள்ள தண்ணீரை மட்டும் நன்கு வடிக்கட்டி அதனுடன் 5 மடங்கு தண்ணீரை சேர்த்து உங்களது ஜாதி மல்லி செடியின் வேர் மட்டும் செடிகளில் நன்கு ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள்.
இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களது ஜாதிமல்லி செடி கிலோ கணக்கில் பூக்க தொடங்குவதை நீங்களே காணலாம்.
பப்பாளி மரத்தில் உள்ள மாவு பூச்சியினை போக்கி அதிக பூக்கள் வைக்க இதை ட்ரை பண்ணுங்க
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |