ஜாதிமல்லி பதியம் போடுவது எப்படி? – Jathimalli plant propagation
பொதுவாக பலருக்கு இருக்கும் ஆசை மல்லிகை செடியை பதியம் போட்டு வளர்க்க வேண்டும் என்று. அந்த வகையில் இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் ஜாதிமல்லி பூ செடியை பதியம் மூலம் வெறும் இரண்டே வாரத்தில் வளர்ப்பது எப்படி என்று தான் தெரிந்துகொள்ள போகிறோம். ஜாதிமல்லி செடி கொடிவகையை சேர்ந்தது, இதனை நாம் வீட்டில் வார்த்தோம் ஏற்றல் அந்த செடி இருக்கும் இடம் மிகவும் நறுமணம் வீசும். இந்த ஜாதிமல்லி செடியை மிகவும் எளிமையான முறையில் எப்படி பதியம் போடலாம் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
ஜாதிமல்லி பதியம் போடும் முறை:
மேல் படத்தில் காட்டியுள்ளது போல் ஒரு ஜாதிமல்லியின் குச்சியை எடுத்துக்கொள்ளுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரோஸ் செடியில் நிறைய பூக்கள் பூக்க டிப்ஸ்..!
அதன் பிறகு இந்த படத்தில் காட்டியுள்ளது போல் ஒரு குச்சியை எடுத்துக்கொள்ளுங்கள்.
அதன்பிறகு நாம் உடைத்து வைத்துள்ள ஜாதி மல்லி கிளையை மண் தொட்டியில அல்லது நிலத்திலோ மேல் படத்தில் காட்டியுள்ளது போல் மண்ணிற்குள் உடையாமல் வைக்கவும். (கிளையை மண்ணிற்குள் புதைக்கும் போது இரண்டு கணுக்காலுக்கு இடையில் இருக்கும் பகுதியை தான் புதைக்க வேண்டும் அப்பொழுது தான் அவற்றில் இருந்து வேர்கள் விட ஆரம்பிக்கும்)
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பூக்காத மல்லிகை பூச்செடியும் தாறுமாறாக பூக்க இந்த ஒரு கரைசல் போதும்..!
அதன் பிறகு நாம் எடுத்து வைத்துள்ளோம் அல்லவா அந்த குச்சியை எடுத்து மேல் படத்தில் காட்டியுள்ளது போல் மண்ணிற்குள் புதைத்து வைத்திருக்கும் ஜாதிமல்லி கிளைக்குள் குத்திவைக்கவும்.
பிறகு மீண்டும் இன்னும் கொஞ்சம் மண்ணை கொட்டி அந்த ஜாதி மல்லி கிளையை மூடவும். மூடிய பிறகு தண்ணீர் ஊற்றவும். அவ்வளவு தான் பதியம் போடும் முறை முடிந்தது.
இந்த ஜாதி மல்லி பதியத்திற்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட வேண்டும். அதேபோல் மண் கலவையை பொறுத்தவரை செம்மண் பாதி, கோகோபீட் பாதி அளவு என்று கலந்து மண்கலவையை இந்த பதியத்திற்கு பயன்படுத்தலாம் அல்லது வெறும் செம்மண்ணில் மட்டும் பதியம் போடலாம்.
இந்த பதியத்தில் கண்டிப்பாக 15 நாட்கள் முதல் 20 நாட்களுக்கு தளிர்கள் விட ஆரம்பித்துவிடும்.
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | pasumai vivasayam in tamil |