நெல் வயலில் உள்ள களைகளை போக்க வேப்ப எண்ணெய் போதும்..!

Kalai Kolli Marunthu in Tamil

Kalai Kolli Marunthu in Tamil

இந்த உலகில் மனிதன் நிம்மதியாக வாழ்வதற்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுவது உணவு, உடை, உறையுள்(வீடு) ஆகியவையே ஆகும். இதில் முதலாவதாக உள்ள உணவினை நமக்கு அளிப்பது விவசாயம் தான். அதிலும் குறிப்பாக நமது தேவைப்படும் முக்கியமான உணவுகளில் ஒன்றான அரிசியினை நமக்கு அளிக்க தேவைப்படுவது விவசாயம் தான். நெல்லினை பயிரிட்ட பிறகு அந்த வயலில் அதிக அளவு களைகள் முளைக்கும் அவ்வாற்றால் நமது நெல் பயிரின் ஊட்டச்சத்துக்கள் பெருமளவு உறிஞ்சப்பட்டு நெல் பயிரின் வளர்ச்சி குறைய தொடங்கும். எனவே களைகளை எளிமையான முறையில் எவ்வாறு போக்குவது என்பதை பற்றி இன்றைய பதிவில் விரிவாக காணலாம் வாங்க..

பூக்காத சாமந்தி பூச்செடியையும் கிலோ கணக்கில் பூக்க வைப்பதற்கு இந்த ஒரு பொடி போதும்

Paddy Field Natural Herbicide in Tamil:

Paddy Field Natural Herbicide in Tamil

நெல் வயலில் உள்ள களைகளை போக்க உதவும் இயற்கையான குறிப்பினை பற்றி இங்கு விரிவாக காணலாம் வாங்க..

முதலில் இந்த குறிப்பிற்கு தேவைப்படும் பொருட்களை பார்க்கலாம் வாங்க.

  1. வேப்ப எண்ணெய் – 100 மி.லி 
  2. எலுமிச்சை பழம் – 2
  3. கல் உப்பு – 2 கிலோ 
  4. கோமியம் – 1/2 லிட்டர் 
  5. ஒட்டும் பசை – 10 மி.லி
  6. தண்ணீர் – 11 லிட்டர் 

நெல் வயலில் எலி தொல்லை நீங்க வறுத்த கடலையை இப்படி செய்து வைத்தாலே போதும்

குறிப்பு செய்முறை:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 லிட்டர் தண்ணீரில் 10 மி.லி ஒட்டும் பசை மற்றும் 100 மி.லி வேப்ப எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பிறகு ஒரு பெரிய வாலியில் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 லிட்டர் கோமியத்தை சேர்த்து அதனுடன் 2 எலுமிச்சை பழத்தில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்.

பிறகு அதனுடன் 2 கிலோ கல் உப்பு மற்றும் நாம் முன்னரே கலந்து வைத்துள்ள தண்ணீர் வேப்ப எண்ணெய் கலவையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு அதில் நாம் எடுத்து வைத்துள்ள 10 லிட்டர் தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

நாம் கலந்து வைத்துள்ள கலவையினை ஸ்ப்ரே மெஷினில் சேர்த்து உங்கள் வயல் முழுவதும் உள்ள களைகளின் மீது படுமாறு நனவு ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள்.

பூக்காத மல்லிகை பூ செடியிலும் பூக்க வைப்பதற்கு வெந்தயம் மட்டும் போதும்

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம்