Karumbu Sagupadi in Tamil
வணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவின் மூலம் ஒன்றை நாற்று கரும்பு சாகுபடி செய்வதை பற்றி கீழே பார்க்க போகிறோம். நம் தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடி என்ற தொழில் மிகவும் முக்கியமான தொழிலாக உள்ளது. தமிழ்நாட்டில் கரும்பு நல்ல விளைச்சலை தரும் தொழிலாக உள்ளன. அதனால் இன்றைய பதிவின் மூலம் ஒன்றை நாற்று கரும்பு சாகுபடி செய்வதை பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
இதையும் பாருங்கள் 👉 இயற்கை விவசாயம் செய்வது எப்படி
மண் கலவை முறை :
முதலில் நிலத்தை 5 கலப்பை வைத்து நன்றாக உழுவ செய்ய வேண்டும். பிறகு நிலத்தை நன்றாக சம அளவு மண்ணை பரப்பளவு செய்ய வேண்டும்.
கரும்பு சொட்டு நீர் பாசனம் முறை மற்றும் அதன் அவசியம்..!
கரும்பு நாற்று முறை :
நிலத்தில் 4 அடி இடைவெளியில் கரும்பை நட வேண்டும். பின்பு மண்ணில் 1 அடி அல்லது 1, 3/4 அடிக்கு ஒரு கரும்பை நடவு செய்தல் வேண்டும்.
உரம் :
நீங்கள் வைத்திருக்கும் நிலத்தை பொறுத்து உரம் அளவு மாறுபடும். நிலத்திற்கு 3 டிப்பர் உரம் மற்றும் 2 மூட்டை சூப்பர் பாஸ்பேட் உரத்தை போடவும்.
சொட்டு நீர் பாசனம் :
கரும்பு நாற்றில் சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீரை பாய்ச்ச வேண்டும். தினமும் 1 மணி நேரம் பாய்ச்சுதல் அவசியம். அதிலும் கரும்பு நாற்றில் வேர்களில் பகுதி நனையும் படி நீரை பாய்ச்ச வேண்டும்.
இயற்கை விவசாயம் ரோஜா சாகுபடி முறை முழு விளக்கம்..!
களைகளை அகற்றுதல் முறை :
தினமும் தண்ணீர் விடுவதால் களைகள் ஏற்படும். அதனால் கரும்பு நடவு செய்து 15 நாட்களுக்கு பிறகு களைகளை அகற்ற வேண்டும். அடுத்தபடியாக 38 நாள் பிறகு செங்கரு உரத்தை கரும்பு நாற்றின் இடையில் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை தெளித்து விடவும்.
அடுத்தது 3 மாதம் இறுதியில் பொட்டாசியம் மற்றும் பூஸ்டர் என்ற உரத்தை தெளிக்க வேண்டும். கரும்புக்கு இடையில் உள்ள பாதையில் உள்ள களைகளை அகற்றுவது அவசியமானதாகும். அது போல எப்பொழுதும் நிலத்தில் தண்ணீர் சரியாக பாய்ந்து உள்ளதா என்று தினசரி பார்த்து கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் 60 நாள் வரை களைகள் இல்லாமல் பார்த்து கொள்வதன் மூலம் நல்ல ஆரோக்கியமான கரும்பு கிடைக்கும்.
கரும்பு சாயாமல் இருக்க :
அடுத்தது 7 மாதத்தில் கரும்பு தோகை வர தொடங்கி விடும். அப்போது கரும்பு இலைகளை கட்ட வேண்டும் அப்படி செய்வதால் கரும்பு சாயாமல் இருக்கும். 12 மாதத்தில் கரும்பை அறுவடை செய்து விடலாம்.
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | விவசாயம் |