How to Grow Karuveppilai Plant in Tamil
சமையலை பொறுத்தவரை சைவம் மற்றும் அசைவம் என இரண்டு விதமாக உள்ளது. அந்த வகையில் இந்த இரண்டு வகைகளில் நாம் எந்த சாப்பாட்டினை சமைத்தாலும் கறிவேப்பிலையினை சேர்த்து வரும் பழக்கம் அதிகமாக இருக்கும். கறிவேப்பிலை இதற்காக மட்டும் பயன்படுத்தாமல் துவையல், சட்னி, குழம்பு, கறிவேப்பிலை சாதம் மற்றும் முடி வளர்ச்சி என பல வகையான பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் இதனின் தேவை என்பது அதிகமாக இருப்பதனால் பலம் கடையில் காசு கொடுத்து வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே செடி வளர்த்து வருகிறார்கள். ஆனால் நாம் செடி வாங்கி வரும் போது நன்றாக செழிப்பாக இருக்கும். அதன் பார்த்தால் அது சரியாக வளராமல் குச்சியாகவே இருக்கும். எனவே வெறும் குச்சியாக இருக்கும் கறிவேப்பிலை செடியை கடகடவென வளர வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான டிப்ஸ் பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
நெல் வயலில் எலி தொல்லை நீங்க வறுத்த கடலையை இப்படி செய்து வைத்தாலே போதும்
கறிவேப்பிலை செடி வளர்ப்பு:
நீங்கள் உங்களுடைய வீட்டு தோட்டத்தில் வளர்த்து வரும் கறிவேப்பிலை செடிக்கு நைட்ரஜன் சத்து ஆனது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
- கம்போஸ்ட்- 1 கைப்பிடி அளவு
- வேப்பம் புண்ணாக்கு- 2 கைப்பிடி அளவு
முதலில் நீங்கள் வளர்த்து வரும் கறிவேப்பிலை செடிக்கு 2 கைப்பிடி வேப்பம் புண்ணாக்கினை அதனின் வேர்களில் படுமாறு போட்டு கொண்டு அதனுடன் 1 கைப்பிடி அளவு கம்போஸ்ட்டும் சேர்த்து போட்டு விடுங்கள்.
இதற்கு அடுத்தபடியாக செடி வாடாமல் இருக்க சரியான அளவில் தண்ணீர் ஊற்றி வாருங்கள். இத்தகைய முறையினை செய்வதன் மூலம் கறிவேப்பிலை செடி நன்றாக வளர ஆரம்பிக்கும்.
செம்பருத்தி செடியில் உள்ள மாவு பூச்சினை போக்க மைதா மாவு போதும்
பெரிய இலைகள் வைக்க:
புளித்த மோர்- 1 டம்ளர்
கறிவேப்பிலை செடியில் பெரிய பெரிய இலைகள் வைக்க நுண்ணுயிர் சத்துக்களை பெருக வைக்க வேண்டும். அதனால் 1 டம்ளர் மோருக்கு 10 மடங்கு தண்ணீர் சேர்த்து கலந்து செடியில் உள்ள இலைகளின் மீதும் வேர்களிலும் தெளித்து வந்தால் போதும் இலை பெரியதாக வைக்கும்.
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |