Karuveppilai Sedi Nangu Valara Tips in Tamil
பொதுவாக நம்முடன் இந்த உலகில் சேர்ந்து வாழ்கின்ற மற்ற உயிரினங்களையும் நமது மனம் மிகவும் விரும்பும். அப்படி தான் நமது மனமானது தாவரங்கள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. அப்படி நமது மனமானது மிகவும் விரும்பி வளர்க்கும் செடிகளில் ஒன்று தான் இந்த கருவேப்பிலை செடியும் ஒன்று. ஏனென்றால் இந்த கருவேப்பிலையால் நமக்கு பலவகையான நன்மைகள் கிடைக்கிறது. அதாவது நமது உடலுக்கு தேவையான பலவகையான ஊட்டச்சத்துக்களை நமக்கு இந்த கருவேப்பிலை அளிக்கின்றது. அப்படி நாம் மிகவும் விரும்பி வளர்க்கும் கருவேப்பிலை செடி நன்கு செழித்து வளரவில்லை என்றால் நமது மனம் மிகவும் வருத்தப்படும். அதனால் தான் இன்றைய பதிவில் நமது வீடுகளில் உள்ள கருவேப்பிலை செடி நன்கு செழித்து வளர உதவும் டிப்ஸ் ஒன்றை பற்றி விரிவாக அறிந்து கொள்ளவோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Karuveppilai Sedi Nangu Valara Fertilizer in Tamil:
பொதுவாக நாம் அனைவரின் வீடுகளிலும் கருவேப்பிலை செடி இருக்கும். அப்படி இருக்கும் செடி அவ்வளவாக செழிப்பாக வளராமல் இருந்தால் அது நமக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.
அதனால் நமது வீடுகளில் உள்ள கருவேப்பிலை செடி நன்கு செழித்து வளர உதவும் ஒரு எளிமையான குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..
குறிப்பிற்கு தேவைப்படும் பொருட்கள்:
- நன்கு புளித்த மோர் – 1 கப்
- பெருங்காயத்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- வேப்ப புண்ணாக்கு – 1 கைப்பிடி அளவு
- அரிசி கழுவிய தண்ணீர் – 1 கப்
- தண்ணீர் – 4 கப்
ரோஜா செடி அதிக பூக்களுடன் பூத்து குலுங்க ஒரே ஒரு கிளாஸ் இதை ஊற்றுங்க போதும்
பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:
முதலி ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் நன்கு புளித்த மோரை சேர்த்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
வேப்ப புண்ணாக்கை சேர்த்து கொள்ளவும்:
அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு வேப்ப புண்ணாக்கை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
அரிசி கழுவிய தண்ணீரை கலக்கவும்:
அடுத்து அதில் 1 கப் அரிசி கழுவிய தண்ணீரை கலந்து கொள்ளுங்கள்.
செம்பருத்தி செடியில் 7 நாட்களில் பூக்கள் தாறுமாறாக பூக்க இத Try பண்ணி பாருங்க…..
பயன்படுத்தும் முறை:
இப்பொழுது அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 கப் தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து 2 நாட்களுக்கு அப்படியே விடுங்கள். பிறகு இதிலிருந்து ஒரு கப் எடுத்து உங்களின் வீட்டில் உள்ள கருவேப்பிலை செடியின் வேர்களில் ஊற்றி கொள்ளுங்கள்.
மேலும் அதனின் இலைகளில் படுமாறு ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களின் கருவேப்பிலை செடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும்.
மண்ணே இல்லாமல், 5 நாளில் கொத்தமல்லியை உங்க வீட்டிலேயே வளர்க்கலாம் ..
நெல் வயலில் உள்ள களைகளை போக்க வேப்ப எண்ணெய் போதும்
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |