கருவேப்பிலை செடி செழிப்பாக வளர என்ன செய்யலாம்.

Advertisement

கருவேப்பிலை செடி வளர்ப்பது எப்படி.?

நாம் சமைக்கும் உணவுகளில் கருவேப்பிலை இல்லாமல் எந்த உணவும் நிறைவு பெறாது. சட்னி முதல் கூட்டு வரை எல்லாவற்றிலும் கருவேப்பிலையை சேர்ப்போம். இருந்தாலும் இதனை மொத்தமாக வீட்டில் வாங்கி வைக்க முடியாது, சீக்கிரமாக அழுகி போகிவிடும். அதனால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வாங்க வேண்டியிருக்கும். இப்படி அடிக்கடி வாங்குவதற்கு வீட்டிலேயே வளர்த்தால் பயனுள்ளதாக இருக்கும். அதனால் இந்த பதிவில் கருவேப்பிலை செடி வளர்ப்பது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கருவேப்பிலை செடி வளர்க்கும் முறை:

கருவேப்பிலை செடியானது எல்லா மண்ணிலும் வளர கூடியது, ஆனால் செம்மண்ணை தேர்ந்தெடுப்பது நல்லது.

செம்மண்ணில் சிறிதளவு தொழு உரம் அலல்து மண்புழு உரம் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த மண்ணில் கருவேப்பிலை செடியை நட வேண்டும்.

உரம்:

கருவேப்பிலை செடி வளர்ப்பது எப்படி

எல்லா செடிக்கும் உரம் முக்கியது என்பது போல கருவேப்பிலை செடிக்கும் உரம் ரொம்ப முக்கியம்.

நாம் வீணாக கீழே ஊற்ற கூடிய அரிசி கழுவிய தண்ணீர் கருவேப்பிலை செடிக்கு உரமாக பயன்பட போகிறது.

அரிசி கழுவிய தண்ணீரை ஒரு குடத்தில் அல்லது பாக்கெட்டில் சேமித்து கொண்டே வாருங்கள். அவை புளித்தாலும் பரவாயில்லை. ஏனென்றால் புளித்தவற்றில் தான் சத்துக்கள் அதிகமாக இருக்கும்.

ஒரு 3 நாட்கள் கழித்து புளித்த அரிசி கழுவிய தண்ணீரிலிருந்து ஒரு கப் எடுத்து அதனுடன் நல்ல தண்ணீர் 3 கப் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த தண்ணீரை கருவேப்பிலை செடியின் வேரில் படுகின்ற மாதிரி தினமும் ஊற்றி வர வேண்டும்.

முக்கியமாக இந்த தண்ணீரை காலை மற்றும் மற்றும் மாலை நேரத்தில் தான் ஊற்ற வேண்டும்.

மேலும் செடியை சூரிய ஒளி படுகின்ற இடத்தில் வைத்தால் தான் செடி நன்றாக செழித்து வளரும்.

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement