கருவேப்பிலை செடி வளர்ப்பது எப்படி.?
பொதுவாக கருவேப்பிலை இல்லாமல் எந்த சமையலும் இல்லை. உணவிற்கு ருசியை கொடுப்பதற்கு கருவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கறிவேப்பிலையில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை எளிதில் கிடைக்க கூடியதாக இருந்தாலும் கடையில் சென்று தான் வாங்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் கருவேப்பிலை இல்லாமல் போவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் வீட்டிலேயே இருந்தால் நல்லா இருக்கும் என்று வளர்க்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் செடி நன்றாக வளர்ச்சி அடைவதில்லை. அதனால் தான் இந்த பதிவில் கருவேப்பிலை வேகமாக வளர்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..
கருவேப்பிலை செடி வளர்க்கும் முறை:
பொதுவாக கருவேப்பிலை செடி விதை, கட்டிங்க்ஸ், நாற்று மூன்று விதமாக வளர்க்கப்படுகிறது. நீங்கள் எப்படி வளர்த்தாலும் அதற்கு உரம் கொடுப்பதில் தான் அதன் வளர்ச்சியே உள்ளது. அதனால் இதில் உரத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
மண்:
கருவேப்பிலை செடி வளர்ப்பதற்கு எந்த மண்ணை வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். அதில் சிறிதளவு கம்போஸ்ட், வேப்பம் புண்ணாக்கு இவை இரண்டையும் கலந்து மண்ணில் கலந்து விட வேண்டும். அதன் பிறகு கருவேப்பிலை செடியை நட வேண்டும். இதன் மூலம் பூச்சி தாக்குதல், இலை அழுகல், வேர் தாக்குதல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும்.
நெல் வயலில் எலி தொல்லை நீங்க வறுத்த கடலையை இப்படி செய்து வைத்தாலே போதும்
உரம்:
அரிசி கழுவிய தண்ணீரை கீழே ஊற்றாமல், கருவேப்பிலை செடிக்கு ஊற்றி வர வேண்டும்.
சின்ன வெங்காயத்தை மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இதனுடன் தண்ணீர் கலந்து கொள்ள்வும். இந்த தண்ணீரை கருவேப்பிலை செடிக்கு உரமாக கொடுத்து வந்தால் செடி வேகமாக வளரும்.
நீங்கள் கொடுக்கும் உரமானது செடியை சுற்றி இருக்க வேண்டும், அதற்கு செடியை சுற்றி குழி தோண்டி அதில் ஊற்ற வேண்டும்.
கிளையை நறுக்க வேண்டும்:
கருவேப்பிலையில் கரும்புள்ளிகள் தோன்றினால் அந்த கிளைகளை நறுக்க வேண்டும். இல்லையென்றால் எல்லா செடிகளுக்கும் பரவி விடும்.
அதே போல் செடிக்கு கீழே கிளைகள் வந்தால் நறுக்கி விட வேண்டும். ஏனென்றால் நீங்கள் கொடுக்கும் உரத்தில் உள்ள சத்துக்கள் அந்த செடிகளுக்கே சேர்ந்து விடும்.
செம்பருத்தி செடியில் உள்ள மாவு பூச்சினை போக்க மைதா மாவு போதும்
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |