Kathirikai Chedi Valarpathu Eppadi
வீட்டில் செய்யும் சாம்பார், புளிக்குழம்பு, வறுவல், கிரேவி மற்றும் கறி என இவை அனைத்திற்கும் அதிகமாக பயன்படும் காய்களில் கத்தரிக்காயும் ஒன்று. அந்த வகையில் தினம் தினம் கத்தரிக்காய் சமைக்கும் பழக்கமானது பல வீடுகளில் இருக்கும். இவ்வாறு கத்தரிக்காயின் தேவை அதிகமாக உள்ள காரணத்தினால் வீட்டிலேயே கத்தரிக்காய் செடியை வளர்ப்பார்கள். ஆனால் செடி நன்றாக வளரும் அளவிற்கு அதில் காய்கள் அந்த அளவிற்கு இருக்காது. ஆகையால் இன்று கத்தரிக்காய் செடியில் காய்கள் அதிகமாக காய்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்கபோகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கத்தரிக்காய் செடி வளர்ப்பு:
கத்தரிக்காய் செடியினை நடவு செய்வதற்கு முன்பாக அதற்கான மண் கலவையை தயார் செய்து கொண்டு அதில் கத்தரிக்காய் செடியை நடவு செய்யுங்கள். அதன் பிறகு கத்தரி செடிக்கு நாள் ஒன்றுக்கு 1 முறை தண்ணீர் ஊற்ற வேண்டும்.
இவ்வாறு பராமரிப்பதோடு பழக்கழிவுகளையும் அதற்கு உரமாக கொடுப்பதன் மூலம் பூக்கள் அதிகமாக வைக்க ஆரம்பிக்கும்.
காய்கள் அதிகம் காய்க்க:
- தயிர்- 1 ஸ்பூன்
- பெருங்காயத்தூள்- 2 ஸ்பூன்
- மஞ்சள்தூள்- 1 ஸ்பூன்
- தண்ணீர்- 1 லிட்டர்
இப்போது நீங்கள் 1 வாளியில் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தினையும் நன்றாக கலந்து கத்தரி செடி மேல் பகுதியினை இலை, பூ மற்றும் தண்டு என இவற்றின் மீது ஸ்பிரே செய்வதன் மூலம் பூக்கள் அனைத்தும் காயாக மாறிவிடும்.
இதை மட்டும் உரமா கொடுங்க தக்காளி செடியிலிருந்து கூடை கூடையாய் காய்கள் காய்க்கும்
கத்தரி செடி பூச்சி:
கத்தரி செடி என்றாலே அதிகமாக பூக்களின் தொல்லை தான் இருக்கும். இவ்வாறு பூச்சிகளை வேப்ப எண்ணெய் கரைசல் மூலம் எளிமையாக விரட்டலாம்.
- தண்ணீர்- 1 லிட்டர்
- வேப்ப எண்ணெய்- 1 ஸ்பூன்
- ஷாம்பு- 2 ஸ்பூன்
மேல் கூறியுள்ள பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த கரைசலை கத்தரி செடிக்கு ஸ்ப்ரே செய்வதன் மூலம் பூச்சிகளின் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
இத்தகைய முறையினை நாம் சரியாக செய்வதன் மூலம் கத்தரி செடியில் காய்கள் அதிகமாக காய்க்க ஆரம்பிக்கும்.
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |