கத்தரிக்காய் செடியில் அதிக காய்கள் காய்க்க
பொதுவாக காய்கறிகளை கடையில் சென்று தான் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் கடையில் வாங்கும் சாப்பிடும் காய்கறிகளில் ரசாயனம் கலந்திருப்பார்கள். இதை சாப்பிடும் போது நமக்கு உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் நம் வீட்டிலேயே காய்கறிகளை பயிரிட வேண்டும். பலரும் புலம்பலாக இருப்பது செடியை பயிரிடுகிறேன், ஆனால் அதிலிருந்து வளர்ச்சி காணப்படுவதில்லை, அதற்கு என்ன செய்வது என்று கேட்டால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும். இந்த பதிவில் கத்தரிக்காய் செடியில் அதிக காய்கள் பிடிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
கத்தரிக்காய் செடி நடுவது எப்படி.?
கத்தரிக்காய் செடி நீங்கள் நாற்றாக வாங்கி வந்து நட்டால் ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் 1 அடி இடைவெளி விட்டு நட வேண்டும்.
கருவேப்பிலை செடி மரமாக மாற இதை மட்டும் செய்யுங்க போதும்..
அடுத்து செடியை நடுவதற்கு தோண்டப்பட்டிருக்கும் குழியில் ஆட்டு சாணம் அல்லது மாட்டு சாணம் ஏதவாது ஒன்றை சேர்க்கவும். அதன் பிறகு செடியை நடை வேண்டும். பின் அதில் தண்ணீர் கொடுக்க வேண்டும்.
நடவு நட்ட பிறகு 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுக்க வேண்டும்.
ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள:
சில ஏரியாக்களில் தண்ணீர் அதிகமாக கிடைக்காது. அப்போது நீங்கள் அடுப்பு எரிக்கும் சாம்பலை செடியை சுற்றி போட வேண்டும். அதன் பிறகு தண்ணீர் ஊற்ற வேண்டும். சாம்பலானது ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ளும் இருக்கிறது.
பூ பூக்கும் சமயம்:
பூ பூக்கும் சமயத்தில் கடலை புண்ணாக்கு கரைசலை செடிக்கு கொடுக்க வேண்டும். இவை கொடுப்பதால் பூ அதிகமாக பூத்து காய்கள் அதிகமாக பூப்பதற்கு உதவி செய்கிறது.
காய்கள் அதிகமாக காய்க்க:
மாதத்தில் ஒரு நாள் ஆட்டு உரம், மாட்டு உரம், தொழு உரம் மூன்றில் எதாவது ஒன்றை செடியை சுற்றி குழி தோண்டி அகில் சேர்க்க வேண்டும். இப்படி செய்வதினால் காய்கள் அதிகமாக காய்ப்பதற்கு உதவி செய்கிறது.
மண்ணே இல்லாமல், 5 நாளில் கொத்தமல்லியை உங்க வீட்டிலேயே வளர்க்கலாம் ..
ஒரே ஒரு வெண்டைக்காய் செடியில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்க வெங்காயம் மட்டும் போதும்.
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |