வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

காய்க்காத கத்திரிக்காய் செடியும் கொத்து கொத்தாக காய்க்க இதை 1 கிளாஸ் ஊற்றுங்க..

Updated On: October 31, 2023 12:32 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Kathirikai Sedi Valarpu

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே தங்களின் வீட்டில் அழகுக்காகவோ தேவைக்காகவோ பல வகையான செடிகளை வளர்க்கிறார்கள். அப்படி பலரும் விருப்பப்பட்டு வளர்க்கும் செடிகளில் ஒன்று கத்திரிக்காய் செடி. அப்படி நாம் விருப்பப்பட்டு வளர்க்கும் கத்திரிக்காய் செடியில் அதிக காய்கள் காய்க்கவில்லையே என்று கவலைபடுபவர்களுக்காக தான் இன்றைய பதிவு. ஆம் நண்பர்களே தினமும் நமது பதிவின் மூலம் உங்களின் செடிகளின் ஆரோக்கியத்தை பலப்படுத்த உதவும் சில குறிப்புகளை பற்றி அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கத்திரிக்காய் செடியில் அதிக அளவு காய்கள் காய்ப்பதற்கு உதவும் குறிப்பினை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Tips to Get More Fruit from Brinjal Plant in Tamil:

Tips to Get More Fruit from Brinjal Plant in Tamil

பொதுவாக நாம் அனைவருக்குமே மிக மிக பிடித்த காய்கறி வகைகளில் ஒன்று தான் இந்த கத்திரிக்காய். அதனால் கத்திரிக்காய் செடியில் அதிக அளவு காய்கள் காய்ப்பதற்கு உதவும் குறிப்பினை பற்றி விரிவாக காணலாம்.

தேவையான பொருட்கள்:

  1. அரிசி தண்ணீர் – 4 லிட்டர் 
  2. காய்கறி கழிவு – 2 கைப்பிடி அளவு 
  3. கடலை புண்ணாக்கு – 2 கைப்பிடி அளவு 
  4. வேப்பம் புண்ணாக்கு  2 கைப்பிடி அளவு

1 கிளாஸ் இந்த தண்ணீரை ஊற்றுங்க நீண்ட நாட்களாக காய்க்காத தக்காளி செடியும் கொத்து கொத்தாக காய்க்கும்

செய்முறை:

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 லிட்டர் அரிசி தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். பின்னர் அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு காய்கறி கழிவினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

அடுத்து அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு கடலை புண்ணாக்கு மற்றும் 2 கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இதனை ஒரு வாரத்திற்கு அப்படியே விடுங்கள். அதன் பிறகு இதிலிருந்து 1 கப் எடுத்து அதனுடன் இரண்டு மடங்கு தண்ணீர் கலந்து உங்களின் கத்திரிக்காய் செடிகளுக்கு ஊற்றுங்கள்.

இதனை தொடர்ந்து செய்து ஊற்றி வருவதன் மூலம் உங்களின் கத்திரிக்காய் செடியில் அதிக காய்கள் காய்ப்பதை நீங்களே காணலாம்.

ஒரு கைப்பிடி உளுந்து போதும் காய்ந்த ரோஜா செடியும் பூத்து குலுங்கும்

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை