உங்க விட்டு கத்திரிக்காய் செடியில கொத்து கொத்தாக காய்கள் காய்க்க வேப்ப எண்ணெய் போதும்..!

Advertisement

Kaththarikkai Sedi Athiga Kaigal Kaika Tips in Tamil

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே தங்களின் வீட்டில் அழகுக்காகவோ தேவைக்காகவோ பல வகையான செடிகளை வளர்க்கிறார்கள். அப்படி பலரும் விருப்பப்பட்டு வளர்க்கும் செடிகளில் ஒன்று கத்திரிக்காய் செடி. அப்படி நாம் விருப்பப்பட்டு வளர்க்கும் கத்திரிக்காய் செடியில் அதிக காய்கள் காய்க்கவில்லையே என்று கவலைபடுபவர்களுக்காக தான் இன்றைய பதிவு. ஆம் நண்பர்களே தினமும் நமது பதிவின் மூலம் உங்களின் செடிகளின் ஆரோக்கியத்தை பலப்படுத்த உதவும் சில குறிப்புகளை பற்றி அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கத்திரிக்காய் செடியில் அதிக அளவு காய்கள் காய்ப்பதற்கு உதவும் குறிப்பினை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

கருவேப்பிலை செடி கிடு கிடுவென வளர இதை ஒரு முறை ட்ரை பண்ணுங்க

Homemade Fertilizer for Brinjal Plant in Tamil:

Homemade Fertilizer for Brinjal Plant in Tamil

பொதுவாக நம்மில் பலருக்கும் கத்திரிக்காய் என்றால் மிக மிக பிடிக்கும். அப்படி நாம் அனைவருக்கும் மிகவு பிடித்த கத்திர்க்காய் செடியை நாம் அனைவருமே நமது வீடுகளில் வளர்ப்போம்.

அப்படி நாம் மிகவும் விரும்பி வளர்க்கும் கத்திரிக்காய் செடியில் காய்கள் காய்க்கவில்லை என்றால் நமது மனம் மிகவு கஷ்டப்படும். அதனால் தான் கத்திரிக்காய் செடியில் அதிக அளவு காய்கள் காய்ப்பதற்கு உதவும் குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க.

  1. அரிசி தண்ணீர் – 4 லிட்டர் 
  2. காய்கறி கழிவு – 2 கைப்பிடி அளவு 
  3. கடலை புண்ணாக்கு – 2 கைப்பிடி அளவு 
  4. வேப்ப எண்ணெய் – 200 மி.லி 
  5. வேப்பம் புண்ணாக்கு  2 கைப்பிடி அளவு 

ஒரே ஒரு வெண்டைக்காய் செடியில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்க வெங்காயம் மட்டும் போதும்

பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 லிட்டர் அரிசி தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.

காய்கறி கழிவினை சேர்த்து கொள்ளவும்:

பின்னர் அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு காய்கறி கழிவினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

கடலை புண்ணாக்கிணை சேர்த்து கொள்ளவும்:

அடுத்து அதனுடனே 2 கைப்பிடி அளவு கடலை புண்ணாக்கினையும் சேர்த்துக் நன்கு கலந்து கொள்ளுங்கள்.

நெல் வயலில் எலி தொல்லை நீங்க வறுத்த கடலையை இப்படி செய்து வைத்தாலே போதும்

வேப்ப எண்ணெய்யை கலக்கவும்:

பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 200 மி.லி வேப்ப எண்ணெய்யை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

வேப்பம் புண்ணாக்கிணை சேர்த்து கொள்ளவும்:

இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்கினையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை ஒரு வாரத்திற்கு அப்படியே விடுங்கள்.

அதற்கு பிறகு இதனை உங்களின் கத்திரிக்காய் செடிகளுக்கு ஊற்றுங்கள். இதனை தொடர்ந்து செய்து ஊற்றி வருவதன் மூலம் உங்களின் கத்திரிக்காய் செடியில் அதிக காய்கள் காய்ப்பதை நீங்களே காணலாம்.

செம்பருத்தி செடியில் உள்ள மாவு பூச்சினை போக்க மைதா மாவு போதும்

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement