உங்க வீட்டு கத்திரி செடியில் சிறிதும் பெரிதுமாக நிறைய காய் காய்க்க இதை மட்டும் சரியாக செய்யுங்கள் ….

Advertisement

கத்திரிக்காய் மகசூலை அதிகரிக்க 

இந்தியாவில் உற்பத்தியாகும் மிக முக்கியமான காய்கத்திரிக்காய். இது வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகள் மற்றும் மிதமான பகுதிகளில் வெப்பமான பகுதிகளிலும் நன்கு வளரக்கூடியது. கத்திரிக்காய் மகசூல் இந்தியாவில் ஆண்டு முழுவதும் நடைபெறும். அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அத்தகைய சிறப்புவாய்ந்த கத்திரிக்காய் உங்கள் தோட்டத்தில் இருந்தால் அதன் விளைச்சலை எவ்வாறு அதிகரிப்பது என்று உங்களுக்கு தெரியவில்லையா, கத்திரிக்காய் செடிகளில் அதிக பூச்சி தொல்லைகள் உள்ளதா, கவலை வேண்டாம், வாருங்கள் இந்த பதிவை முழுமையாக படித்தது உங்கள் தோட்டத்தில் உள்ள கத்திரி செடியின் விளைச்சலை அதிகரிப்போம்.

கத்திரி விளைச்சலை அதிகரிக்க:

கத்திரி விளைச்சல்

நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் முக்கியமானதாக இருக்கும் கத்திரிக்காய் விளைச்சலை, இனி உங்க தோட்டத்தில் சிறப்பான முறையில் செய்ய சில டிப்ஸ்…

பயிரிடும் காலம்:

நாள் தோறும் பயன்படுத்தும் காய்களில் முக்கியமானது கத்தரி. இதை டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் தொடங்கி மே மாதம் வரை பயரிடலாம்.

மண் வகை:

நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த வண்டல் மண் அல்லது களிமண் கலந்த வண்டல் மண் கத்தரி சாகுபடிக்கு சிறந்தது.

நீர் பாசனம்:

கத்திரி விளைச்சலை அதிகரிக்க

நடவு செய்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும்.

அதன் பின்னர் 7 நாட்களுக்கொருமுறை நீர் பாய்ச்சவேண்டும்.

கத்திரியை தாக்கும் பூச்சிகள்:

ஹட்டா வண்டு, அசுவனி, தண்டு மற்றும் காய் துளைப்பான் போன்றவை கத்திரிச்செடியை பாதிக்கும் காரணியாகும்.

உரங்கள் மற்றும் உரங்கள்:

வெண்டை வளர்ச்சிக்கு அதிக கரிம உரம் தேவைப்படுகிறது. அதனால் நிலத்தை உழும் போதே தொழு உரம் ஈட வேண்டும்

இவற்றில் இருந்து கத்திரியை பாதுகாக்க செடிகளை நடவு செய்யும் போதே அடி  உரமாக வேப்ப புண்ணாக்கு கொடுக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் செடிகளுக்கு தழை சத்து முக்கியம். அவற்றால் செடிகளில் அசுவனி பூச்சிகளை ஏற்படும் மகரந்த சேர்க்கை குறைபாட்டை குறைக்கும்.

உங்கள் வீட்டு கத்திரிக்காய் சாகுபடியில் நல்ல பராமரிப்பு இருந்தால் நிச்சயமாக நல்ல லாபம் பார்க்க முடியும். கத்திரிக்காய் செடியை நடவு செய்து 55 நாட்களுக்குப் பிறகு செடியில் காய்கள் காய்க்கு தொடங்கும். 10 சென்ட் நிலப்பரப்பில் குறைந்தது 250 செடிகள் வளர்க்கலாம்.

அறுவடை:

Homemade-Fertilizer-for-Brinjal-Plant-in-Tamil-1

ஒரு செடிக்கு குறைந்தபட்சம் 30 கிராம் அளவுள்ள கத்திரிகாய்கள் காய்க்கும்.

70 நாள்களுக்கு ஒருமுறை 10 சென்ட் நிலத்தில் 25 கிலோ வரை கத்திரிக்காய்களை பறிக்க முடியும். ஒரு மாதத்திற்கு 4 முறை காய்கள் பறிக்கலாம்.

கத்தரி செடிகளின் நெருக்கமாக நடாமல் 3×3 அடி என்ற இடைவெளியில் நட வேண்டும். 10 சென்ட் நிலப்பரப்புக்க ரூபாய் 2500 முதலீடாக தேவைப்படும். நிச்சயமாக நல்ல பராமரிப்பு இருந்தால் கத்திரி செடிகளில் ஒரு 10 சென்ட் நிலத்தில் மாதம் 10,000 வரை சம்பாதிக்கலாம்.

காய்க்காத மிளகாய் செடியில் கிலோ கணக்கில் காரமான காய் காய்க்க நிலக்கடலை மட்டும் போதும்..!

வீட்டு தோட்டத்தில் வெண்டைக்காய் கொத்து கொத்தாக காய்க்க சில Tips….

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement