வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கத்திரிக்காய் செடி தாறுமாறாக காய்கள் காய்க்க இதை 1 கிளாஸ் ஊற்றுங்கள் போதும்..!

Updated On: April 9, 2025 7:12 PM
Follow Us:
Kaththirikkai Sedi Athigam Kaikka Tips in Tamil
---Advertisement---
Advertisement

Kaththirikkai Sedi Athigam Kaikka Tips in Tamil

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே தங்களின் வீட்டில் அழகுக்காகவோ தேவைக்காகவோ பல வகையான செடிகளை வளர்க்கிறார்கள். அப்படி பலரும் விருப்பப்பட்டு வளர்க்கும் செடிகளில் ஒன்று கத்திரிக்காய் செடி. அப்படி நாம் விருப்பப்பட்டு வளர்க்கும் கத்திரிக்காய் செடியில் அதிக காய்கள் காய்க்கவில்லையே என்று கவலைபடுபவர்களுக்காக தான் இன்றைய பதிவு.

ஆம் நண்பர்களே தினமும் நமது பதிவின் மூலம் உங்களின் செடிகளின் ஆரோக்கியத்தை பலப்படுத்த உதவும் சில குறிப்புகளை பற்றி அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கத்திரிக்காய் செடியில் அதிக அளவு காய்கள் காய்ப்பதற்கு உதவும் குறிப்பினை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

Homemade Fertilizer for Brinjal Plant in Tamil:

Homemade Fertilizer for Brinjal Plant in Tamil

நம்மில் பலருக்கும் கத்திரிக்காய் மிக மிக அதிக அளவு பிடித்த ஒரு காயாக இருக்கும். அதனால் நாம் அனைவருமே நமது வீடுகளில் உள்ள சிறிய அளவிலான தோட்டத்தில் கூட இந்த கத்திரிக்காய் செடியை வைத்து வளர்ப்போம்.

அப்படி நாம் வளர்க்கும் கத்திரிக்காய் செடியில் அதிக காய்கள் காய்ப்பதற்கு உதவும் ஒரு குறிப்பினை பற்றி இங்கு விரிவாக காணலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. அரிசி தண்ணீர் – 4 லிட்டர் 
  2. காய்கறி கழிவு – 2 கைப்பிடி அளவு 
  3. கடலை புண்ணாக்கு – 2 கைப்பிடி அளவு 
  4. வேப்பம் புண்ணாக்கு  2 கைப்பிடி அளவு 

1 கிளாஸ் இதை ஊற்றுங்க போதும் பூக்காத மல்லிகை செடியையும் கிலோ கணக்கில் பூத்து குலுங்கும்

செய்முறை:

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 லிட்டர் அரிசி தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு காய்கறி கழிவு, 2 கைப்பிடி அளவு கடலை புண்ணாக்கு மற்றும் 2 கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை சேர்த்து ஒரு வரம் நன்கு ஊறவிடுங்கள்.

பின்னர் அதில் உள்ள தண்ணீரை மட்டும் வடிக்கட்டி கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் இருமடங்கு தண்ணீரை ஊற்றி கொள்ளுங்கள். இதிலிருந்து ஒரு கப் தண்ணீரை மட்டும் உங்கள் கத்திரிக்காய் செடியில் ஊற்றி கொள்ளுங்கள்.

இதனை தினமும் அல்லது வாரம் இரண்டு முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் கத்திரிக்காய் செடி அதிக அளவு காய்கள் காய்க்க தொடங்கும்.

ஜாதி மல்லி வருடம் முழுவதும் பூத்து குலுங்க வெங்காயம் ஒன்று போதும்

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now