கற்றாழை செடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர என்ன செய்வது தெரியுமா..?

Advertisement

Katralai Chedi Vegamaga Valarpathu Eppadi Tamil

பொதுவாக என்ன நம்முடைய வீடுகளில் நிறைய பூச்செடிகள் இருந்தாலும் கூட கற்றாழை செடி இருந்தால் மட்டுமே தான் அந்த தோட்டமானது பூர்த்தி அடைந்ததை போல ஒரு உணர்வு ஆனது காணப்படும். அந்த வகையில் மற்ற செடிகளை போல கற்றாழை செடி வளர்ப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனென்றால் கற்றாழை செடியினை சரியான முறையில் பராமரித்து வந்தால் மட்டுமே தான் அதனை வேகமாகவும், செழிப்பாகவும் வளர செய்ய முடியும். அதனால் இன்று வீட்டிலேயே கற்றாழை செடியினை எவ்வாறு வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர வைப்பது என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம். ஆகையால் பதிவை முழுவதுமாக படித்து கற்றாழை செடியினை எவ்வாறு செழிப்பாக வளர்ப்பது என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கற்றாழை செடி வளர்ப்பது எப்படி..?

கற்றாழை செடியினை நீங்கள் எப்போதும் சிறந்த மண் கலவையில் தான் நட வேண்டும். ஏனென்றால் மண் கலவை சரியில்லை என்றால் செடி ஆனது வளருவதற்கு மிகவும் கடினமாக இருக்கும்.

ஆகையால் கற்றாழை செடியினை நல்ல முறையில் நடவு செய்து அதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். ஈரப்பதம் இல்லை என்றாலும் கற்றாழை செடி சரியாக வளராது.

  1. வாழைப்பழம் தோல்- 4/5 பங்கு
  2. முட்டை ஓடு- 4/5 பங்கு
  3. உருளைக்கிழங்கு தோல்- 1 கைப்பிடி அளவு 
  4. தண்ணீர்- 1 லிட்டர்

கற்றாழை செடி வளர்ப்பது எப்படி

இப்போது ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த பாத்திரத்தில் வாழைப்பழத்தோலினை முதலில் போட்டு கொள்ளுங்கள்.

அடுத்து வாழைப்பழத்தோலின் மேலே முட்டை ஓடு மற்றும் உருளைக்கிழங்கு தோலினை போட்டு ஒன்றோடு ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.

கடைசியாக கலந்து வைத்துள்ள பொருளுடன் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி மூடி நன்றாக 3 நாட்கள் வரை ஊற வைத்து விடுங்கள்.

3 நாட்கள் கழித்த பிறகு பார்த்தால் உங்களுக்கு தேவையான கரைசல் தயார். இப்போது அந்த தண்ணீரை வடிகட்டி கொண்டு கற்றாழை செடிக்கு ஊற்றி வேண்டும். இவ்வாறு நீங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை செய்வதன் மூலம் கற்றாழை செடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து கற்றாழை செடி வேகமாகவும், செழிப்பாகவும் வளர ஆரம்பிக்கும்.

மண்ணே இல்லாமல், 5 நாளில் கொத்தமல்லியை உங்க வீட்டிலேயே வளர்க்கலாம் ..

ஒரே ரோஜா செடியில் நிறைய பூக்கள் பூக்க என்ன பண்ணனும் தெரியுமா…

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement