Kavaththu Seivathu Eppadi
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகிறோம். அதேபோல் இப்பதிவில் ஒரு பயனுள்ள தகவல்களை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். அதாவது கவாத்து என்றால் என்ன.? கவாத்து எப்படி செய்வது.? என்பதனை பற்றித்தான் இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். கவாத்து என்ற சொல்லினை பலபேர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் கவாத்து என்றால் என்ன என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. எனவே, அதனை பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
கவாத்து என்றால் என்ன.?
கவாத்து என்பது மரம் மற்றும் செடிகளில் உள்ள காய்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும் முறையாகும். அதாவது, மரங்கள் மற்றும் செடிகளில் உள்ள பக்கவாட்டு கிளைகளை வெட்டி ஒழுங்குபடுத்தும் முறையாகும்.
உரம் பெயர்கள்,உரம் வகைகள்(ம)உரம் பயன்கள்.
கவாத்து செய்வதின் நன்மைகள்:
மரம் மற்றும் செடிகளில் தேவையற்ற கிளைகளை வெட்டி நீக்குவதன் மூலம் கிடைக்கப்பெறும் ஊட்டச்சத்தும் முழுவதும் வீணாகாமல் பயிர்களுக்கு கிடைக்கிறது.
மரங்கள் மற்றும் செடிகளில் கவாத்து செய்வதன் மூலம் அதில் புதிய கிளைகள் மற்றும் பூ மொட்டுக்களை துளிர்க்க செய்கிறது. இதனால் அதிக அளவில் கனிகளையும் பூக்களையும் மகசூல் செய்யலாம்.
கவாத்து எப்படி செய்வது.?
முதலில் மரம் மற்றும் செடிகளில் தேவையின்றி இருக்கும் பக்க கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தவும்.
பிறகு, மரத்திற்கு காற்றோட்டமும் சூரிய ஒளியும் கிடைக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள கிளைகளை சிறிய அளவில் வெட்டி நீக்கிவிட வேண்டும்.
கவாத்து பூவெடுக்கும் நேரங்களில் பார்த்து செய்ய வேண்டும். சில மரங்களில் அதிக அளவில் கவாத்து செய்யலாம். உதாரணமாக, முருங்கை மரத்தில் அதிக அளவில் கவாத்து செய்தால் கூட மீண்டும் துளிர்விட்டு காய்க்க தொடங்கும்.
ஆனால், ஒரு சில மரங்கள் மற்றும் செடிகளை சிறிய அளவில் மட்டுமே கவாத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் மரங்கள் பட்டு போக தொடங்கும்.
எனவே, கவாத்து செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இயற்கை உரம் வகைகள் | இயற்கை உரம் தயாரிப்பு
கவாத்து செய்யக்கூடாத நேரங்கள்:
மரம் மற்றும் செடிகள் நோய் தாக்குதல் இருக்கும் நேரங்களில் கவாத்து செய்ய கூடாது.
பயிர்களுக்கு போதிய அளவில் தண்ணீர் இல்லாமல் இருக்கும் நேரங்களில் கவாத்து செய்ய கூடாது.
மரங்கள் மற்றும் செடிகள் பூ வைத்த பிறகு கவாத்து செய்ய கூடாது.
மேலும், மரங்கள் மற்றும் செடிகள் பூ வைப்பதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பும் கவாத்து செய்ய வேண்டும்.
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |