Keerai Chedi Valarpathu Eppadi
காய்கறிகளில் அதிக சத்துக்கள் இருந்தாலும் கீரையில் உள்ள சத்துக்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது அவை அனைத்தும் சற்று குறைவாக தான் இருக்கிறது. அந்த வகையில் வாரம் 3 முறை கீரை சாப்பிடுவது என்பது மிகவும் அவசியம் என்று கூறுவார்கள். அதனால் நாம் எப்போதும் கீரையினை கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் இனி நீங்கள் கீரையினை கடைகளில் வாங்கி சாப்பிடவேண்டாம். ஏனென்றால் இன்று மாடித்தோட்டத்தில் எளிய முறையில் செழிப்பாக கீரையினை வளர வைப்பது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கீரை செடி வளர்ப்பது எப்படி..?
முதலில் நீங்கள் எந்த வகையிலான கீரையினை நடவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதற்கான விதையினை வாங்கி கொள்ளுங்கள். அதாவது அரைக்கீரை மற்றும் முழுக்கீரை விதையினை வாங்கி கொள்ளுங்கள்.
அதன் பிறகு கீரை நடவு செய்வதற்காக 18-க்கு 6 என்ற முறையில் குரோ பேக்கினை வாங்கி அதில் மண் கலவையை நிரப்பி சம படுத்தி கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து வாங்கி வைத்துள்ள விதையினை மண்ணில் கலந்து தயார் செய்து வைத்து கொள்ளுங்கள்.
விதை தெளிக்கும் முறை:
அடுத்த படியாக குரோ பேக்கில் கீரை விதையினை தூவி விட்டு தண்ணீர் விட்டு அதன் மேலே மாட்டுச்சாணத்தை தூவி விட்டு பின்பு மணல் சாக்கு போட்டு அந்த குரோ பேக்கை மூடி விடுங்கள்.
தண்ணீர் விடும் முறை:
நீங்கள் நடவு செய்த பிறகு தினமும் தண்ணீர் விட்டு பின்பு சாக்கினை கொண்டு மூடி வைத்து விடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்தால் போதும் 3 நாட்களில் விதை முளைக்க ஆரம்பித்து விடும்.
பூச்சி விரட்டி:
அதேபோல் கீரை முளைத்து இலை வந்தவுடன் சாக்கை எடுத்து வெயிலில் வளர வைய்யுங்கள். கீரை நன்றாக வளர்ந்த பிறகு மீன் அமிலத்தை தண்ணீரில் கலந்து வாரம் 1 முறை ஸ்ப்ரே செய்தால் போது பூச்சி எதுவும் தாக்காது.
உரம்:
உங்களுடைய கீரை விதை முளைக்காமல் இருந்தாலோ அல்லது மண் கலவை சயிரில்லாத போது மட்டுமே மண்புழு கொடுங்கள்.
இத்தகைய முறையில் செய்தால் போதும் 25 முதல் 30 நாட்களில் கீரை அறுவைடைக்கு வந்து விடும்.
தண்ணீர் இருந்தால் போதும்.. வீட்டில் வெந்தய கீரை வளர்க்கலாம்…மண் தேவையே இல்ல ..
7 நாட்களில் ஒரே செடியில் நிறைய மல்லிகை பூ பூக்க இதை மட்டும் செய்யுங்க
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |