வீட்டில் கொத்தமல்லி செடி வளர்ப்பது எப்படி.?
பொதுவாக சமையலில் வாசனையாகவும், ருசியாகவும் கொத்தமல்லி இலையை சேர்ப்பார்கள். ஆனால் இதனை பெரும்பாலும் கடையில் தான் வாங்கி வருவோம். கடையில் வாங்கி வந்தாலும் இதனை 3 நாட்களுக்கு தான் வைத்திருக்க முடியும். பிரிட்ஜ் வைத்திருந்தார்கள் என்றால் ஒரு வாரத்திற்கு வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். நீங்கள் இது போல கடையில் வாங்கி வராமல் நமது வீட்டிலேயே பயிரிட்டால் தினமும் பறித்து கொள்ளலாம் அல்லவா.! அதனால் இந்த பதிவில் வீட்டிலேயே கொத்தமல்லி செடி வளர்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வீட்டிலேயே கொத்தமல்லி செடி வளர்ப்பது எப்படி.?
விதை தயார் செய்வது:
முதலில் கொத்தமல்லி விதையினை எடுத்து கொள்ளவும். இதனை ஒரு துணியில் சேர்த்து இரண்டாக உடைக்க வேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அதில் ஆற்று மணல் அல்லது உங்கள் வீட்டில் உள்ள எந்த மண்ணாக இருந்தாலும் எடுத்து கொள்ளவும். பின் அதில் மண்புழு உரம், சாணம் போன்றவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். அதில் உடைத்து வைத்த மல்லி விதைகளை சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை ஒரு துணியில் சேர்த்து கட்டி கொள்ளவும்.
செம்பருத்தி செடியில் 7 நாட்களில் பூக்கள் தாறுமாறாக பூக்க இத Try பண்ணி பாருங்க…..
புதினா செடி 5 நாட்களில் துளிர் விடும், 20 நாட்களில் புதினா இலைகள் வந்து விடும்
அடுத்து ஒரு பாத்திரத்தை எடுத்து தண்ணீர் ஊற்றி கொள்ளவும். இதில் நாம் கட்டி வைத்துள்ள துணியை நினைத்து தனியாக ஒரு மூன்று நாட்களுக்கு அப்படியே வைக்க வேண்டும்.
இந்த மூன்று நாட்களும் துணியில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதனால் தண்ணீரை தெளித்து கொண்டே இருக்க வேண்டும்.
நடவு செய்வது எப்படி.?
மூன்று நாட்கள் கழித்து பார்த்தால் செடியிலிருந்து துளிர் விட்டிருக்கும். அதனை 40% தேங்காய் நார், 40% மண்புழு உரம், 20% மண் சேர்த்து கலந்து கொள்ளவும். அதிலிருந்து கொஞ்ச மணலை எடுத்து கொள்ளவும். பிறகு இதில் முளைத்த கொத்தமல்லியை சேர்த்து கலந்து விடவும்.
அதன் மேல் முளைத்தது தெரியாதது போல் மண்ணை மேலே போடவும். அதன் பிறகு தினமும் தண்ணீரை தெளிக்க வேண்டும். 15 நாட்கள் கழித்து பார்த்தால் கொத்தமல்லி பெரிதாக வந்திருக்கும்.
7 நாட்கள் போதும் உங்கள் வீட்டு தோட்டத்தில் பசுமையான வெந்தய கீரை துளிர்விட…
7 நாட்களிலே பூக்காத மல்லிப்பூ செடியும் துளிர்விட்டு பூக்கள் பூக்க இதை மட்டும் செய்யுங்க
7 நாட்களிலே பூக்காத ரோஜா செடியும் துளிர்விட்டு பூக்கள் பூக்க இதை மட்டும் செய்யுங்க..!
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |