Kothamalli Valarpu Tips in Tamil
நாம் அனைவருக்குமே ஒரு மாதிரியான ஆசை ஆர்வம் ஆகியவை இருக்குமா..? என்றால் இல்லை என்பதே உண்மை. அதாவது ஒரு சிலருக்கு சமைப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். மேலும் ஒரு சிலருக்கு நடனம், பாடல் பாடுவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அதேபோல தான் ஒரு சிலருக்கு தாவரங்கள் வளர்ப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும் அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம். அதாவது இன்றைய சூழலில் அனைவருக்குமே தங்களது வீடுகளில் தாவரம் வளர்ப்பதில் அதிக அளவு ஆர்வம் உள்ளது. அதனால் அனைவருமை தங்களது வீடுகளில் சிறிய தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அமைத்து செடிகளை வளர்க்கிறார்கள். அப்படி உள்ள தோட்டங்களில் கண்டிப்பாக இடம்பெற்றுள்ள செடி என்றால் அது கொத்தமல்லி செடி தான். அதனால் இன்றைய பதிவில் கொத்தமல்லி செடி நன்கு செழித்து வளர உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க.
10 நாளில் கற்றாழை செடி நன்கு சதைப்பற்றுடன் வளர இதை 1 டீஸ்பூன் கொடுங்க போதும்
கொத்தமல்லி செடி வளர்ப்பு:
நாம் அனைவருக்குமே கொத்தமல்லியின் நறுமணம் மிக மிக பிடிக்கும். அதனால் அனைவருமே தங்களது வீடுகளில் இந்த கொத்தமல்லி செடியை வைத்து வளர்கிறார்கள்.
எனவே கொத்தமல்லி செடியை எவ்வாறு விதைத்தால் நன்கு வளரும் என்பதை பற்றி இங்கு விரிவாக காணலாம் வாங்க.
வெறும் 10 நாட்கள் குண்டு மல்லி பூ செடி பூத்து குலுங்க இதை பற்றி பண்ணுங்க
கொத்தமல்லி விதை விதைப்பது எப்படி.?
முதலில் நல்லநிலையில் உள்ள கொத்தமல்லி விதைகளை எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை இரண்டாக உடைத்து கொள்ளுங்கள். பிறகு அதனை ஒரு துணியில் வைத்து அதனுடன் 1 கப் மண்புழு உரத்தை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
அடுத்து அந்த துணியை நன்கு ஒரு முட்டை போல் கட்டி கொள்ளுங்கள். இதனை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து லேசாக நினைத்து கொள்ளுங்கள். இதனை மூன்று நாட்கள் அப்படியே விடுங்கள் அவ்வப்போது லேசாக தண்ணீர் தெளித்து ஈரப்பதத்துடன் வைத்து கொள்ளுங்கள்.
இதனின் மூலம் அது நன்கு மூளைக்கட்டி இருக்கும். மூன்று நாட்களுக்கு பிறகு ஒரு மண்சட்டியில் 40% மண்புழு உரம், 40% மண்கலவை மற்றும் 20% காய்கறி கழிவுகள் சேர்த்து நன்கு கலந்து அதனின் மீது நாம் மூளைக்கட்டி வைத்துள்ள கொத்தமல்லி விதையை விதைத்து அவ்வப்போது லேசாக தண்ணீர் தெளித்து வருவதால் அது 3 நாட்களிளிலேயே நன்கு செழித்து வளர தொடங்கும்.
தண்ணீர் இருந்தால் போதும்.. வீட்டில் வெந்தய கீரை வளர்க்கலாம்…மண் தேவையே இல்ல ..
வீட்டு தோட்டத்தில் கொத்துக் கொத்தாக கொத்தவரங்காய் காய்க்க சில Tips
7 நாட்களில் ஒரே செடியில் நிறைய மல்லிகை பூ பூக்க இதை மட்டும் செய்யுங்க
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |