வீட்டு தோட்டத்தில் கொத்துக் கொத்தாக கொத்தவரங்காய் காய்க்க சில Tips….

Advertisement

கொத்தவரங்காய் கிலோ கணக்கில் காய்க்க  

இந்தியாவில் உற்பத்தியாகும் மிக முக்கியமான காய் கொத்தவரங்காய். வறட்சியை தங்கி வளரக்கூடிய காய்வகைகளில் ஒன்று கொத்தவரங்காய். இது வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகள் மற்றும் மிதமான பகுதிகளில் வெப்பமான பகுதிகளிலும் நன்கு வளரக்கூடியது. இந்தியாவில் கொத்தவரங்காய் ஏற்றுமதி  நடைபெறுகிறது. அதிக சத்துக்கள் நிறைந்த கொத்தவரங்காய் மகசூல் இந்தியாவில் ஆண்டு முழுவதும் நடைபெறும். அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அத்தகைய சிறப்புவாய்ந்த கொத்தவரங்காய்  உங்கள் தோட்டத்தில் இருந்தால் அதன் விளைச்சலை எவ்வாறு அதிகரிப்பது என்று உங்களுக்கு தெரியவில்லையா, வாருங்கள் இந்த பதிவை முழுமையாக படித்தது உங்கள் தோட்டத்தில் உள்ள கொத்தவரங்காய்  செடியின் விளைச்சலை அதிகரிப்போம்.

கொத்தவரங்காய் விளைச்சலை அதிகரிக்க:

koththavarangai sediyil makasulai

நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் முக்கியமானதாக இருக்கும் கொத்தவரங்காய்  விளைச்சலை, இனி உங்க தோட்டத்தில் சிறப்பான முறையில் செய்ய சில டிப்ஸ்…

காலநிலை:

கொத்தவரங்காய் வளர மிதமான வெப்பம் (அதாவது 22-35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை) தேவைப்படும்.

நிலத்தில் சரியான அளவு ஈரப்பதம் இருந்தால் செடி 2 முதல் 3 அடி வளரக்கூடியது.

கோடைகாலத்திலும் அதிக மகசூலை தரக்கூடிய ஒரு சிறந்த தாவரமாக கொத்தவரங்காய் இருக்கும்.

மண் தேவை:

கொத்தவரங்காய் அனைத்து வகையான மண்ணிலும் நன்றாக வளரக்கூடியது.

கொத்தவரங்காயின் அதிக விளைச்சலுக்கு களிமண் சிறந்தது.

மண்ணின் pH மதிப்பு  6 முதல் 6.8 வரை இருந்தால் சிறந்தது.

நிலம் தயாரித்தல்:

கொத்தவரங்காய் பயிரிட போகும் நிலத்தை 2 அல்லது 3 முறை உழவு செய்ய வேண்டும்.

நிலத்தினை உழவு செய்யும் போது, ​​நன்கு மக்கிய தொழு உரம் எக்டருக்கு 25 டன் என்ற கணக்கில் ஈட்டு ம்,மண்ணினை தயார்படுத்த வேண்டும்.

வேப்பம் பிண்ணாக்கு செடியின் வளர்ச்சி மற்றும் விளைச்சலை அதிகரிக்க உதவும்.

விதைக்க கூடிய காலம்:

கோடை காலத்தில், 1 எக்டருக்கு 5 முதல் 6 கிலோ விதைகளை விதைக்கலாம். அதுவே மழைக்காலத்தில், 8 முதல் 12 கிலோ விதைக்க வேண்டும்.

விதைகளை விதைப்பதற்கு முன் பாவிஸ்டின் (0.2%) கரைசலில் 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த விதைகளை நிழலில் உலர வைக்க வேண்டும்.

மழை காலத்தில் 60 x 30 செ.மீ இடைவெளியிலும், கோடை காலத்தில் 30 x 30 செ.மீ இடைவெளியிலும் விதைகளை விதைக்க வேண்டும்.

நீர்ப்பாசனம்:

கோடையில், வாரத்திற்கு இரண்டு முறை தண்ணீர் விட்டால் போதுமானது. இது வறட்சியை தங்கும் பயிர்வகை ஆகும்.

உரங்கள் மற்றும் உரங்கள்:

செடியின் வளர்ச்சிக்கு அதிக கரிம உரம் தேவைப்படுகிறது. அதனால் நிலத்தை உழும் போதே தொழு உரம் ஈட வேண்டும்.

அறுவடை:

நடவு செய்த 35-40 நாட்களில் பூக்கத் தொடங்கிவிடும். 55 முதல் 65 நாட்களில் அறுவடை செய்யலாம்.

காய்க்காத மிளகாய் செடியில் கிலோ கணக்கில் காரமான காய் காய்க்க நிலக்கடலை மட்டும் போதும்..!

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement