குண்டு மல்லி செடியில் பூக்கள் பூத்து குலுங்க எலுமிச்சை பழ தோல் மட்டும் போதும்..

kundu malli sedi valarpu

குண்டு மல்லி செடி வளர்ப்பது எப்படி.?

பெரும்பாலான வீடுகளில் பூச்செடிகள் வளர்ப்பார்கள். பூச்செடி வளர்ப்பதன் மூலம் வீடு அழகாக  இருக்கும். அதனாலேயே பூச்செடிகளை ஆசைப்பட்டு வளர்கின்றனர். சில பேர் வச்ச பூச்செடிகள் உடனே வளர்ந்து அதிலிருந்து பூக்கள் பூத்து குலுங்கும். சில பேர் வச்ச பூச்செடிகளிலிருந்து பூக்களே பூக்காது இதனால் ரொம்ப கவலை அடைவார்கள். அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கு பூச்செடிகள் மீது அதிக ஆர்வம் இருக்கும். வீட்டில் தினமும் பூக்கள் பூத்தால் தினமும் வைத்து கொள்ளலாம் என்று நினைப்பார்கள். பூச்செடிகளில் அதிக பூக்கள் பூப்பதற்கு நிறைய வகையான டிப்ஸ்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் குண்டு மல்லி செடியில் அதிக பூக்கள் பூப்பதற்கு என்ன செய்ய வேண்டும்  அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

குண்டு மல்லி செடி வளர்க்கும் முறை:

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, குண்டு மல்லி செடியில் அதிக பூக்கள் பூக்க வேண்டும் என்றால் பூக்களை வெயில் உள்ள இடத்தில் வைக்க வேண்டும். அதற்காக உச்சி வெயிலில் வைக்க சொல்லவில்லை. காலை வெயில் மற்றும் மாலை வெயில் படுகிற அளவிற்கு இருந்தால் போதுமானது.

ரோஜா செடியில் அதிக பூக்கள் பூப்பதற்கு எப்சம் சால்ட் மட்டும் போதும்..

உரம்:

குண்டு மல்லி செடி வளர்க்கும் முறை

குண்டு மல்லி செடிக்கு உரம் கொடுப்பது ரொம்ப முக்கியமானது. அதில் உரத்திற்காக நாம் எடுத்து கொள்ளும் பொருள் எலுமிச்சை தோல், ஆரஞ்சு தோல்களை எடுத்து கொள்ளவும்.

இந்த தோள்களை துண்டு துண்டாக வெட்டி ஒரு மூடி போட்ட டப்பாவில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்ள வேண்டும். இதனை 5 நாட்கள் வரைக்கும் அப்படியே ஊற வேண்டும். இதனை தினமும் கலந்து விட வேண்டும்.

5 நாட்கள் கழித்து இதில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கலந்து விட வேண்டும். அதன் பிறகு இந்த தண்ணீரை எடுத்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி செடிகளில் ஸ்ப்ரே செய்யலாம். இல்லையென்றால் வேர் பகுதிகளில் ஊற்றி வரலாம்.

இந்த கரைசலை வாரத்தில் வாரத்தில் ஒரு நாள் ஊற்ற வேண்டும்.

வெங்காய தோலை மேல் கூறியது போல் ஊற வைத்து 5 நாட்கள் கழித்து தண்ணீர் கலந்து செடியின் வேர் பகுதியில் ஊற்ற வேண்டும். வெங்காய கரைசல் ஒரு வாரமும், எலுமிச்சை தோல் ஒரு வாரமும் ஊற்ற வேண்டும்.

மாதுளை செடியிலேயே காய்கள் காய்க்க வாரம் 1 முறை இதை ட்ரை பண்ணி பாருங்க 

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம்