எலுமிச்சை காய்க்க
எலுமிச்சை பழம் சமையல் முதல் பூஜை வரை பயன்படுகிறது. ஆனால் இந்த பழத்தை பயன்படுத்துவதற்கு கடையில் தான் வாங்குவோம். அப்படி வாங்கும் போது ஒரு பழத்தின் விலை 5 முதல் 7 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். இதை ஏன் வீட்டில் வளர்க்க கூடாது. நீங்கள் வீட்டில் வளர்ப்பதன் மூலம் சமையலுக்கும் பயன்படுத்தலாம், விற்பனையும் செய்யலாம்.
சில நபர்கள் வீட்டில் எலுமிச்சை மரம் வைத்திருப்பார்கள் ஆனால் பெரிதாக காய்கள் இருக்காது. எலுமிச்சை மரத்தில் காய்கள் இல்லை என்றாலும் சரி, புதிதாக எலுமிச்சை மரம் வைக்க போகிறீர்கள் என்றாலும் சரி இந்த பதிவில் கூறியுள்ள டிப்ஸை Follow பண்ணுங்க காய்கள் கொத்து கொத்தாக காய்க்கும்.
எலுமிச்சை மரத்தில் காய் காய்க்க என்ன செய்ய வேண்டும்.?
நீரோட்டம் இருக்க வேண்டும்:
செடி வைத்திருக்கின்ற இடம் மற்றும் செடி இருக்கின்ற சுற்றுவட்டாரமும் எப்பொழுதும் ஈரப்பதம் இருக்க வேண்டும். மேலும் தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் தேங்கி நிற்பதற்காக செடியை சுற்றி அகலமாக குழி தோண்டி கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ உங்கள் வீட்டு மொட்டை மாடியில் அரளி பூ பூத்து குலுங்க வேண்டுமா..! உங்களுக்கான சூப்பரான டிப்ஸ்..!
உரம்:
நீங்கள் கடையில் விற்கும் உரங்கள் பயன்படுத்த தேவையில்லை. ஊரிலே கிடைக்கும் மாட்டு சாணம் மட்டுமே போதும். மக்கிய சாணமாக இருக்க வேண்டும். செடியின் பக்கத்தில் 1 மாதத்திற்கு ஒரு முறை 1 கிலோ உரம் போட வேண்டும்.
அதுவே பெரிய மரமாக இருந்தால் 5 கிலோ உரம் 1 மாதத்திற்கு ஒரு முறை போட வேண்டும். அரிசி கழுவிய தண்ணீரை தினமும் ஊற்றலாம். செடியின் பக்கத்தில் போட்டால் எப்படி உரம் செடிக்கு போகும் என்ற கேள்வி இருக்கும். செடியை சுற்றி குழி தோண்டிருப்போம் அல்லவா.! அப்போ அந்த குழியில் போடும் போது செடிக்கு சேர்ந்து விடும்.
தேமோ கரைசல்:
தேமோர் கரைசலை செடிகளின் மீது படுமாறு தெளிக்க வேண்டும். தேமோர் கரைசலை தெளிப்பதால் பூக்கள் கொட்டாமல் இருக்கும். அதுமட்டுமில்லாமல், புளித்த மோரினை எலுமிச்சை மரத்தை சுற்றி தெளித்து வரலாம். இதனால் காய்கள் அதிகளவில் காய்க்கும்.
எலுமிச்சை மரத்தில் பூச்சி தாக்குதல் வராமல் தடுப்பதற்கு சாம்பலை மரத்தை சுற்றியும், இலைகளின் மேல் புறத்திலும் தூவி விடலாம்.
இதுபோன்ற முறைகளை பின் பற்றி வந்தால் எலுமிச்சை மரத்தில் காய்கள் அதிகளவில் காய்க்கும்.
இதையும் படியுங்கள் ⇒ மாடித்தோட்டத்தில் பன்னீர் ரோஜா கொத்து கொத்தாக பூக்க என்ன செய்ய வேண்டும்..!
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |