Maadi Thottam Government Kit in Tamil | அரசு மானியம் மாடித்தோட்டம் கிட் 2025
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது தமிழக அரசால் வழங்கப்படும் மானிய விலையில் வெறும் ரூ. 450 ரூபாய்க்கு மாடித்தோட்டம் கிட் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக எப்படி பெறலாம் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க. உங்களுக்கு மாடியில் தோட்டம் அமைக்க ஆர்வம் உள்ளது என்றால் தமிழக அரசு மானிய விலையில் விற்பனை செய்யப்படும் மாடித்தோட்ட கிட்டினை வெறும் ரூ. 450 செலுத்து வாங்கிக்கொள்ளலாம்.
சரி வாங்க இந்த கிட்டில் என்னென்ன பொருட்கள் இருக்கும், யாரெல்லாம் இந்த கிட்டை வாங்க முடியும், எப்படி வாங்கலாம், இதற்கு தேவைப்படும் ஆவணக்கள் என்ன மற்றும் ஆன்லைன் ஆஃப்லைன் ஆகிய முறைகளில் எப்படி வாங்கலாம் என்று இப்பொழுது பார்க்கலாம் வாங்க.
அரசு மானிய மாடித்தோட்டம் கிட் பெறுவது எப்படி? | Tamil Nadu Government Maadi Thottam Kit
தமிழக அரசு சார்பில், மாடித்தோட்டம் அமைப்பவர்களுக்காக சில பொருட்களை வழங்குகிறது. இந்த பொருட்களை ரூ.450 செலுத்தி பெற்று கொள்ளலாம். ஆதார் அட்டை மூலம் இத்திட்டத்தில் பயன் பெறலாம். இத்திட்டம் பற்றிய விவரங்களை பின்வருமாறு விவரமாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழக அரசு மாடித்தோட்டம் அமைக்கும் கலைங்கர்களை ஊக்குவிக்கும் நோக்கில் 900 ரூபாய் மதிப்புள்ள மாடித்தோட்டம் கிட்டினை வெறும் 450 ரூபாய்க்கு பயனர்களுக்கு விற்பனை செய்கிறது.
இதனை பெற உங்களிடம் ரூ. 450 பணம் மற்றும் ஆதார் கார்ட் இரண்டும் இருந்தால் மட்டும் போதும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டு முறைகளிலும் பெறலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாடி தோட்ட செடிகளை பராமரிக்கும் முறை..!
கிட்டில் என்னென்ன பொருட்கள் இருக்கும்?

- செடி வளர்ப்புப் பைகள் – 6
- 2 கிலோ தென்னை நார்கழிவு / மக்கிய கரும்புச்கக்கை கட்டிகள் – 6
- 6 வகையான காய்கறி விதைகள் – 6 விதை பொட்டலங்கள்
- அசோஸ்பைரில்லம் – 300 கிராம்
- பாஸ்போபாக்டீரியா – 300 கிராம்
- டிரைகோடெர்மா விரிடி – 200 கிராம்
- வேப்பெண்ணை மருந்து – 100 மி.லி
- மாடித்தோட்ட காய்கறி வளர்ப்பு முறைக்கான கையேடு
ஆஃப்லைன்:
உங்கள் ஊரில் உள்ள தோட்டக்கலை துறையில் வாங்கி கொள்ளலாம். நேரடியாக வாங்க வேண்டும் என்று விரும்புபவர்கள் உங்களுடைய ஆதார் கார்டின் நகல் ஓன்று மற்றும் உங்களுடைய புகைப்படம், ரூ. 450 ரூபாய் பணம் இரண்டையும் கொடுத்து அந்த கிட்டினை வாங்கி கொள்ளலாம்.
ஆன்லைன் | Maadi Thottam Government Kit Apply Online 2025 Tamilnadu:
ஆன்லைன் மூலமாக வாங்க வேண்டும் என்று விரும்புபவர்கள் https://tnhorticulture.tn.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம். அதற்கான விண்ணப்பபடிவம் கீழ் காட்டியுள்ளது போல் தான் இருக்கும்.

| இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |














