மாடித்தோட்டம் முருங்கை கீரை சாகுபடி..!

Advertisement

How to Grow Murungai Maram in Tamil 

வணக்கம் நண்பர்களே இன்று நாம் மாடித்தோட்டத்தில் முருங்கை சாகுபடி செய்வதை பற்றி தெரிந்து கொள்வோம். முருங்கை கீரையில் பல விதமான சத்துக்கள் உள்ளது. அதனால் நாம் நிலத்தில் சாகுபடி செய்து கஷ்டப்படாமல், நமது வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்து அதன் மூலம் நல்ல பலனை அடையலாம். அதனால் இன்றைய பதிவில் மிகவும் எளிமையான முறையில் முருங்கை கீரை வளர்ப்பது மற்றும் சாகுபடி செய்வதை பற்றி தெளிவாக பார்ப்போம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

முருங்கை விதை :

முதலில் முருங்கை விதையை வாங்கி வைத்து கொள்ள வேண்டும். அந்த முருங்கை விதையின் மேல் ஒரு வெள்ளை லேயராக இருக்கும் விதையை பார்த்து வாங்க வேண்டும். ஏனெனில் அந்த விதையின் வெள்ளை லேயர் இருந்தால் தான் முருங்கை கீரையின் முளைப்பு திறன் நன்றாக இருக்கும்.

நாற்று தட்டு: 

 How to Grow Murungai Maram in Tamil

நாற்று தட்டை எடுத்து கொள்ள வேண்டும். பிறகு அந்த தட்டில் மங்கும் குப்பைகள் மற்றும் மண்ணை சேர்க்க வேண்டும். பின்பு தட்டில் உள்ள மண்ணில் ஒரு நடுவில் குழியை எற்படுத்தி அதில் முருங்கை விதையினை பதிக்க வேண்டும். அதன் மேல் சிறிதளவு தண்ணீரை தெளிக்க வேண்டும். இது அடுத்த நான்கு நாளில் முளைத்து வந்து விடும். இதனை அடுத்த ஒரு வாரத்தில் எடுத்து நடவு செய்து விடலாம்.

மாடித்தோட்டம் புதினா செடி வளர்ப்பு முறை..! 

மண் கலவைகள்: 

 செடி முருங்கை வளர்ப்பது எப்படி

சிவப்பு மண், மாட்டு சாணம், ஆற்று மணல்  மற்றும் ஏதாவது ஒரு மண் வகையை  சேர்ப்பதன் மூலம் செடி நன்றாக வளர செய்யும்.

முதலில் ஒரு சாக்கு பை எடுத்து கொண்டு, அதில் பாதி அளவு மண்ணை நிரப்ப வேண்டும். பிறகு முளைக்க வைத்த முருங்கை செடிகளை நடவு செய்ய வேண்டும். அதன் வேர் பகுதியில் தண்ணீரை தெளிக்க வேண்டும். தினமும் கொஞ்சம் கொஞ்சமாக அதன் மேல் தண்ணீரை தெளிப்பது நல்லது.

முருங்கை இலைகளை வெட்டுதல்:

 செடி முருங்கை சாகுபடி

முருங்கை இலை வளர்ந்த, பிறகு முருங்கை கீரையின் தண்டு பகுதியில் கீழே இருந்து 4 அடி விட்டு விடவும். அதன் நடு பகுதியில் வளைந்து வெட்ட வேண்டும். இப்படி செய்வதனால் அழுகும் நிலை ஏற்படாமல் இருக்கும். அதுமட்டுமில்லாமல் முருங்கை  இலையின் தண்டு காயாமல் இருக்க கற்றாழை ஜெல் அல்லது மாட்டு சாணத்தை தடவி விட வேண்டும். ஏனெனில் இப்படி செய்வதனால் நிறைய கிளைகள் வளர செய்யும்.

மாடித்தோட்டத்தில் வல்லாரை கீரை வளர்ப்பது எப்படி.?

 

பூச்சிகள் தாக்காமல் இருக்க:

 முருங்கை மரம் நடுவது எப்படி

செடிகளில் பூச்சிகள் இல்லாமல் இருப்பதற்கு வேப்ப எண்ணெய் மற்றும் இஞ்சி, பூண்டு தண்ணீர் தெளிப்பதன் மூலம் பூச்சிகள் தாக்காமல் இருக்கும். அதுமட்டுமில்லாமல் 1 மாதத்திற்கு ஒருமுறை வேப்பம் புண்ணாக்கு போடுவதன் மூலம் பூச்சிகள் இல்லாமலும் இருக்கும், செடிகள் நன்றாக வளர செய்யும்.

உரம்:

 செடி முருங்கை வளர்ப்பது எப்படி

முருங்கை செடிக்கு உளுந்து தண்ணீர் மற்றும் அரிசி தண்ணீரை வடிகட்டி  கொடுப்பதன் மூலம் முருங்கை காய் பெரியதாக வளர செய்யும். அதுமட்டுமில்லாமல் மாட்டு சாணத்தை முருங்கை செடியின் வேர்களில் போடுவதன் மூலம் நல்ல வளர்ச்சியை அடைய செய்யும்.

அடுத்தது ஒரு சில நாளில் முருங்கை கீரை மற்றும் காய்கள் கிடைத்து விடும்.

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement