மாவு பூச்சி மருந்து
விவசாயம் என்பது என்றும் அழியாத ஒன்றாக இருக்கிறது. விவசாயி பயிரிட்டு அதை அறுவடை செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். முக்கியமாக அதில் ஒவ்வொரு பிரச்சனையை சந்திக்கும் போது தான் ஏன்டா பயிரிட்டோம் என்றுயோசிக்க வைத்து விடும். இதனை சரி செய்வதற்கு நாட்டு மருந்து கடையில் என்ன பூச்சிகள் தொல்லை செய்யுதோ அதை சொல்லி மருந்துகளை வாங்குவார்கள். யாருமே இயற்கையான மருந்துகளை பயன்படுத்த மாட்டிக்கிறார்கள். அதனால் தான் இந்த பதிவில் இயற்கையான முறையில் மாவு பூச்சிகளை கொள்ள மருந்து தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
இயற்கையான முறையில் மாவு பூச்சியினை கொள்ள:
இந்த மாவு பூச்சியானது பயிர்களை நாசம் செய்கிறது. இதனால் 30% முதல் 40% வரை பயிர்கள் நாசம் அடைகின்றன. வறட்சியும், வெப்பமும் அதிகமாக உள்ள களங்களில் மாவு பூச்சியின் தாக்கம் அதிகமாக காணப்படும்.
மாவுப்பூச்சி தாக்குதலுக்கான அறிகுறிகள்:
பயிரில் மாவுப்பூச்சி தாக்கி இருந்தால் இலைகள் மஞ்சள் நிறமாக இருக்கும். இலைகள் வளைந்தும், நெளிந்தும், குறுத்தில் இலைகள் சிறுத்து திருகிக் கொண்டிருக்கும். இலையின் அடிப்பகுதி, குருத்து, கிளைகள், தண்டுப்பகுதிகளில் வெள்ளையாக அடை போல மாவுப்பூச்சிகள் படர்ந்திருக்கும். சிவப்பு, கருப்பு எறும்புகள் காணப்படும். பளபளப்பான ஒட்டும் தன்மை கொண்ட தேன் போன்ற கழிவுகளும் அதன் மேல் கரும்பூசண வளர்ச்சியும் காணப்படும். இப்பூச்சியின் தாக்குதல் அதிகளவில் இருக்கும் போது இலைகள் வாடி கருகிவிடும்.
மாவு பூச்சியை கொள்ள இயற்கையான வழிமுறை:
தேவையான பொருட்கள்:
- வேப்பிலை2கிலோ
- ஆடாதோடா2கிலோ
- நொட்சி 2கிலோ
- எருக்கு2கிலோ
- நெய்வேலி காட்டாமனக்கு 2கிலோ
- 10 லிட்டர் மாட்டுசிறுநீர்
செய்முறை:
மேல் கூறப்பட்டுள்ள இலைகளை சிறிய சிறியதாக நறுக்கி மாட்டு கோமியத்துடன் 7 நாட்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு இதனை வடிக்கட்டி 10 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் செய்து வைத்துள்ள கலவையை கலந்து கொள்ளவும். இதனை பயிரில் தெளித்து விட வேண்டும்.
10 கிலோ இலைகளுக்கு 10 லிட்டர் மாட்டு கோமியம் சிறந்ததாக இருக்கும். மாட்டு கோமியம் பழையதாக இருக்க வேண்டும்.
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |