ஒரே ரோஜா செடியில் நிறைய பூக்கள் பூக்க என்ன பண்ணனும் தெரியுமா…

Advertisement

 

ரோஜா வளர்ப்பு 

வீட்டில் செடி வளர்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் பெரும்பாலும் முதலில் தேர்ந்தெடுப்பது என்னவோ ரோஜா பூச்செடியாகத் தான் இருக்கிறது. ஆசையாக வாங்கி நட்டு வைத்தால் அது முளைக்குமா என்றால் சந்தேகம் தான். காரணம் ரோஜா செடி வளர்வதற்கான சூழல் மண் ஆகியவை மற்ற செடிகளில் இருந்து மாறுபடுகிறது. அதனால் நீங்கள் என்ன வகையான உரங்கள் கொடுத்தாலும் துளிர்விடுவதும் காய்வதுமாகவே இருக்கும். அப்படி துளிர்விட்டு பூக்க ஆரம்பித்தாலும் ஒரு செடி அதிகபட்சம் 3 பூக்களுக்கு மேல் ஒரே சமயத்தில் பூக்காது. ஆனால் நமக்கு ரோஜா செடியில் நிறைய பூக்கள் பூத்து குலுங்க வேண்டும் என்னும் எண்ணம் இருக்கும். அப்படி உங்களுக்கு ஆசை இருந்தால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். வாருங்கள் பதிவிற்கு செல்லலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ரோஜாச்செடியில் அதிக பூக்கள் பூத்து குலுங்க:

தேவையான பொருட்கள்:

தண்ணீர் – 1/2 லிட்டர்
வாழைப்பழம் தோல் – 3
காபி தூள் – 1 ஸ்பூன்
டீ தூள் – 3 ஸ்பூன்
தயிர் – 1/2 கப்

ரோஜா செடி அதிக பூக்களுடன் பூத்து குலுங்க ஒரே ஒரு கிளாஸ் இதை ஊற்றுங்க போதும்

செய்முறை:

1/2 லிட்டர் தண்ணீரை நன்றாக கொதிக்க விடவும்.

தண்ணீர் நன்றாக கொதித்ததும், அதில் வாழைப்பழ தோல்களை சிறிதாக நறுக்கி போடவும்.

வாழப்பழ தோல் நன்றாக வெகும் வரை கொதிக்கவிடவும். அதனுடன் எடுத்துவைத்துள்ள காபி தூள் மற்றும் டீ தூள்களை சேர்த்துக்கொள்ளவும்.

நன்றாக கொதித்த பின்னர் அடுப்பை அனைத்து விட்டு, கவலையை ஆற விடவும்.

பின்பு கலவை மிதமான சூட்டில் இருக்கும் போது, அதனுடன் தயிரை கலக்கவும்.

தயிரை கலந்த பின்னர் அந்த பாத்திரத்தில் இருந்து ஆவி வெளியே செல்லாதவாறு நன்றாக 24 மணி நேரம் மூடி வைக்க வேண்டும்.

24 மணி நேரத்திற்கு பிறகு இதனை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும். பின்னர் இந்த கலவையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து வாரத்திற்கு ஒரு முறை உங்களது ரோஸ் செடிக்கு தெளிப்பதால் உங்கள் செடிகளில் அதிகம் பூக்கள் பூக்கும்.

புதிதாக நட்ட ரோஜா செடிகள் சீக்கிரம் துளிர்விட இத பண்ணலாமா…

கற்றாழை செடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர என்ன செய்வது தெரியுமா. 

7 நாட்கள் போதும் உங்கள் வீட்டு தோட்டத்தில் பசுமையான வெந்தய கீரை துளிர்விட…

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement