Maligai Sedi Athigam Pooka Tips in Tamil
பொதுவாக பூக்கள் என்றால் பிடிக்காது ஆளே இருக்க மாட்டார்கள். பொதுவாக சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே பூக்கள் என்றால் மிக மிக அதிகமாக பிடிக்கும். ஏனென்றால் பூக்களை பார்க்கும் பொழுது நமது மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படும். அதனால் அனைவருமே தங்களது வீடுகளில் பூச்செடிகளை மிக மிக அதிகமாக விரும்பி வளர்க்கிறார்கள். அப்படி நாம் அனைவராலும் மிக மிக அதிகமாக விரும்பி வளர்க்கப்படும் பூச்செடிகளில் ஒன்று தான் இந்த மல்லிகை பூச்செடி. இந்த மல்லிகை பூவின் நறுமணத்திற்காகவே பலரும் தங்களது வீடுகளில் வளர்ப்பார்கள். ஆனால் நமது வீடுகளில் உள்ள மல்லிகை பூச்செடி அதிக அளவு பூக்கவில்லை என்றால் அது நமக்கு வருத்தத்தை அளிக்கும். அதனால் இன்றைய பதிவில் நமது வீடுகளில் உள்ள மல்லிகை செடியில் அதிக பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மல்லிகை பூ செடி உரம்:
நாம் அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம் தான் அதாவது பொதுவாக ஒரு செடி நன்கு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அதற்கு முதலில் தேவைப்படுவது சூரிய ஒளி தான்.
அதனால் நாம் நமது மல்லிகை செடியை நன்கு சூரிய ஒளி படும் இடத்தில் நடவு செய்யவேண்டும். பின்னர் அதில் உள்ள காய்ந்த மலர்கள் மற்றும் இலைகள் அனைத்தையும் நீக்கிவிட வேண்டும்.
தேவையான பொருட்கள்:
- வெங்காயத்தோல் – 2 கைப்பிடி அளவு
- எலுமிச்சை பழத்தோல் – 4
- டீதூள் – 1 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
ஜாதி மல்லி வருடம் முழுவதும் பூத்து குலுங்க வெங்காயம் ஒன்று போதும்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு வெங்காயத்தோல், 4 எலுமிச்சை பழத்தோல், 1 டேபிள் ஸ்பூன் டீதூள் மற்றும் தேவையான அளவு தண்ணீரை ஆகியவற்றை சேர்த்து 1 வாரம் நன்கு ஊறவிடுங்கள்.
அதன் பிறகு அதில் உள்ள தண்ணீரை மட்டும் வடிகட்டி அதனுடன் 2 மடங்கு தண்ணீரை சேர்த்து உங்களது மல்லிகை செடிக்கு ஊற்றுங்கள். இதனை வாரம் ஒரு முறை அல்லது மாதம் இருமுறை என கொடுத்து வருவதன் மூலம் உங்களின் மல்லிகை செடி அதிக அளவு பூக்கள் பூக்க ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.
1 கப் நாட்டுச்சர்க்கரை போதும் பூக்காத முல்லை பூச்செடியும் தாறுமாறாக பூக்கள் பூக்கும்
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |