மல்லிகைப்பூ செடியில் 10 நாட்களில் பூக்கள் பூத்து குலுங்க இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

Malli Poo Chedi Valarpathu Eppadi

பூக்களின் வாசனை என்பது நாம் எந்த இடத்தில் இருந்தாலும் அது தனியாக தெரியும். இவ்வாறு வாசனை மிகுந்த பூக்களில் மல்லிகை பூ செடியும் ஒன்றாக இருக்கிறது. அதேபோல் மற்ற பூச்செடிகளை போல் செடிக்கு ஒரே ஒரு பூவென மட்டும் பூக்காமல் எண்ணற்ற பூக்களையும் இது தருகிறது. இவ்வாறு பல சிறப்புகளை கொண்டுள்ள மல்லிகைபூச்செடியினை வளர்ப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதிலும் குறிப்பாக செடி நிறைய பூக்களை பூக்க செய்வது என்பது சாத்தியமாற்ற செயலாக பலரும் கருதுகிறார்கள். அதனால் இன்றைய பதிவில் செடி நிறைய மல்லிகை பூ பூக்கள் பூப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்கப்போகிறோம். ஆகவே உங்களுடைய வீட்டிலும் மல்லிகை பூ செடி இருக்கிறது என்றால் பதிவை தொடர்ந்து படிக்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மல்லிகை பூ அதிகமாக பூக்க:

மல்லிகை பூ செடியினை நாம் நடவு செய்த பிறகு அது வாடாத அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டியது மிகவும் அவசியம். அதேபோல் அதில் ஏதாவது ஒரு இலைகள் வாடி இருந்தாலும் கூட அதனை நீக்கி விட வேண்டும்.

மேலும் மல்லிகை பூச்செடி துளிர் விடுவதற்கு அதில் காணப்படும் சிறு சிறு கிளைகளை நறுக்கி விட வேண்டும். இவ்வாறு நறுக்கி விடுவதன் மூலம் மல்லிகை பூ செடி நன்றாக வளர ஆரம்பிக்கும்.

3 நாட்களில் குச்சியாக இருக்கும் மல்லிகை பூச்செடி கூட துளிர்விட்டு பூக்கள் பூத்து குலுங்க வாழைப்பூ மட்டும் போதும்

கொத்தமல்லி செடி 3 நாளில் வேகமாக வளர இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க 

  1. மீன் அமிலம்1/2 மூடி
  2. தண்ணீர்3 முதல் 5 லிட்டர்

மல்லிகை பூ அதிகம் பூக்க

முதலில் ஒரு பெரிய பிளாஸ்டிக் பாத்திரத்தை எடுத்து அதில் இந்த இரண்டு பொருளினையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு கலந்து வைத்துள்ள தண்ணீரை ஒவ்வொரு செடிக்கும் 3/4 அளவு ஜக் என்ற அளவில் ஊற்றுங்கள். இவ்வாறு நீங்கள் மீன் அமிலத்தை செடிகளுக்கு கரைசலாக ஊற்றுவதன் மூலம் செடி செழிப்பாக வளருவதோடு மட்டும் இல்லாமல் செடியில் நிறைய பூக்களும் பூக்க ஆரம்பிக்கும்.

இந்த மீன் அமில கரைசலை 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதம் 1 முறை என கொடுத்து வந்தாலே போதுமானது.

மண்ணே இல்லாமல், 5 நாளில் கொத்தமல்லியை உங்க வீட்டிலேயே வளர்க்கலாம் ..

10 நாளில் பூக்காத ரோஜா செடியினையும் பூக்க வைப்பதற்கு இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement