மல்லிகை செடி வளர்க்கும் முறை
பூக்களை பிடிக்காதவர்கள் என்று இந்த உலகில் யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் காய்கறி செடிகளை வளர்க்காதவர்கள் கூட பூச்செடிகளை வளர்க்கிறார்கள். பெரும்பாலானவர்கள் வீட்டில் ரோஜா செடிகளை தான் வளர்ப்பார்கள். ஆனாலும் மல்லிகை செடிகளை வளர்க்க ஆசைப்படுவார்கள். ஆனால் மல்லிகை செடி நன்றாக வளர்ந்திருக்கும், ஆனால் அதிலிருந்து பூக்கள் பூக்காது என்று கவலைப்படுபவர்கள் ஏரளாமானோர் இருக்கிறார்கள். அதனால் தான் இந்த பதிவில் மல்லிகை பூச்செடியில் அதிக பூக்கள் பூப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மல்லிகை பூச்செடி வளர்க்கும் முறை:
முதலில் மல்லிகை பூச்செடியை வெயில் உள்ள இடத்தில் வைக்க வேண்டும். அப்போது தான் செடி நன்றாக வளர்க்கும்.
அடுத்து செடியில் ஈரப்பதம் எப்போதும் இருக்க வேண்டும். அதனால் தினமும் செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
செடி நட்ட பிறகு மாதத்தில் ஒரு நாள் உரம் போட வேண்டும். அதற்கு செடியை சுற்றி குழி நோண்டி கொள்ள வேண்டும். இந்த குழியை சுற்றி மண்புழு உரம் அல்லது மாட்டு சாணம் போன்றவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்ற வேண்டும். இப்படி செய்வதால் செடி நன்றாக வளரும்.
பச்சை மிளகாய் செடியில் கூடை கூடையாய் காய்கள் காய்க்க இதை மட்டும் ஊத்துங்க..
உரம்:
மல்லிகை பூச்செடியில் அதிக பூக்கள் பூப்பதற்கு வாழைப்பழ தோல் உதவியாக இருக்கிறது. இதில் இருக்கும் பொட்டாசியம் சத்துக்கள் பூக்கள் அதிகமாக பூப்பதற்கு உதவியாக இருக்கிறது.
இதற்கு நீங்கள் வாழைப்பழ தோலை எடுத்து கொள்ள வேண்டும். இதனை தண்ணீரில் சேர்த்து ஊற வைத்து கொள்ள வேண்டும். இதனை இரண்டு நாட்கள் வரைக்கும் ஊற வைக்க வேண்டும்.
இரண்டு நாட்கள் கழித்து வாழைப்பழ தோல் கரைசலை மல்லிகை பூச்செடிக்கு ஊற்ற வேண்டும். இதனை ஊற்றுவதால் மல்லிகை பூச்செடியில் அதிக பூக்கள் பூப்பதற்கு உதவியாக இருக்கிறது.
வாழைப்பழ தோல் இல்லையென்றால் சாம்பல் கரைசலை ஊற்றலாம். சாம்பலை தண்ணீரில் கரைத்து செடிக்கு ஊற்ற வேண்டும். இதனை ஊற்றுவதாலும் மல்லிகை பூச்செடியில் அதிக பூக்கள் பூப்பதற்கு உதவியாக இருக்கிறது.
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |