Malligai Plant Growing Faster in Tamil
பூக்கள் என்றால் பிடிக்காது ஆளே இருக்க மாட்டார்கள். பொதுவாக சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே பூக்கள் என்றால் மிக மிக அதிகமாக பிடிக்கும். ஏனென்றால் பூக்களை பார்க்கும் பொழுது நமது மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படும். அதனால் அனைவருமே தங்களது வீடுகளில் பூச்செடிகளை மிக மிக அதிகமாக விரும்பி வளர்க்கிறார்கள். அப்படி நாம் அனைவராலும் மிக மிக அதிகமாக விரும்பி வளர்க்கப்படும் பூச்செடிகளில் ஒன்று தான் இந்த மல்லிகை பூச்செடி. இந்த மல்லிகை பூவின் நறுமணத்திற்காகவே பலரும் தங்களது வீடுகளில் வளர்ப்பார்கள். ஆனால் நமது வீடுகளில் உள்ள மல்லிகை பூச்செடி அதிக ளவு பூக்கவில்லை என்றால் அது நமக்கு வருத்தத்தை அளிக்கும். அதனால் இன்றைய பதிவில் நமது வீடுகளில் உள்ள மல்லிகை செடியில் அதிக பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
ஒரே ஒரு கிளாஸ் மட்டும் இதை ஊற்றுங்கள் குச்சியாக இருந்த ரோஜா செடியும் பூத்து குலுங்கும்
மல்லிகை பூ செடி வளர்ப்பு முறை:
நாம் அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம் தான் அதாவது பொதுவாக ஒரு செடி நன்கு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அதற்கு முதலில் தேவைப்படுவது சூரிய ஒளி தான்.
அதனால் நாம் நமது மல்லிகை செடியை நன்கு சூரிய ஒளி படும் இடத்தில் நடவு செய்யவேண்டும். பின்னர் அதில் உள்ள காய்ந்த மலர்கள் மற்றும் இலைகள் அனைத்தையும் நீக்கிவிட வேண்டும்.
புளித்த மாவு மட்டும் போதும் மல்லிகை பூ செடியில் பூக்கள் தாறுமாறாக பூக்க
பூக்கவே பூக்காத செம்பருத்தி செடியும் பூத்து குலுங்க 1 துண்டு இஞ்சி போதும்
இப்பொழுது அதற்கு என்ன உரம் அளித்தால் அது நன்கு செழித்து வளர்ந்து அதிக அளவு பூக்கள் பூக்கும் என்பதை பற்றி இங்கு காணலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- வாழைக்காய் – 1
- டீத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- ஸ்ப்ரே பாட்டில் – 1
- தண்ணீர் – தேவையான அளவு
காய்ந்த ரோஜா செடியும் 5 நாட்களில் துளிர்விட்டு பூக்கள் பூத்து குலுங்க வாழைப்பழம் மட்டும் போதும்
செய்முறை:
முதலில் நாம் வாங்கி வைத்துள்ள 1 வாழைக்காய்யை தோலுடனே சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் இந்த வாழைக்காய் நன்கு வேக தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நறுக்கிய வாழைக்காயை சேர்த்து நன்கு வேகவைத்து எடுத்து கொள்ளுங்கள்.
பின்னர் வாழைக்காய்யை வேகவைத்த தண்ணீரை மட்டும் வடிக்கட்டி எடுத்து கொள்ளுங்கள். பிறகு அதனை அடுப்பில் வைத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் டீத்தூளை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.
அதனை நன்கு வடிகட்டி நன்கு சூடினை ஆறவிடுங்கள். இதிலிருந்து ஒரு கிளாஸ் எடுத்து அதனுடன் இரண்டு கிளாஸ் தண்ணீரை சேர்த்து அதனை 1 ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி மல்லிகை செடியின் வேர் மற்றும் நுனி பகுதிகளில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள்.
இதனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் மல்லிகை செடியில் அதிக பூக்கள் பூக்க தொடங்குவதை நீங்களே காணலாம்.
இந்த தண்ணீர் போதும் மல்லிகை செடியில் மொட்டுக்கள் குறையவே குறையாது
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |