மல்லிகை செடி வளர்ப்பது எப்படி.?
பூக்களைப்பிடிக்காதவர்கள் உலகில் யாருமே இருக்கமுடியாது. காய்கறிசெடிகளை வளர்க்காதவர்கள் கூட இரண்டு பூச்செடிகளை வீட்டில் வைத்து வளர்க்க ஆசைப்படுவார்கள். பூக்களின் மணமும், அழகும் பார்பவர்கள் கண்களுக்கும், மனதிற்கும் சந்தோஷத்தையும், மனநிம்மதியையும் அளிக்கக்கூடியது. மேலும் வீடும் அழகாக காட்சியளிக்கும். இதனை வளர்க்கும் போது சில பேர் வீட்டில் அதிக பூக்கள் பூக்கும், சில பேர் வீட்டில் மொட்டுகளே வைக்காது. அதனால் தான் இந்த பதிவில் இயற்கையான முறையில் மல்லிகை செடியில் அதிக பூக்கள் பூப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மல்லிகை செடி வைப்பதற்கு மண் கலவை:
மல்லிகை பூச்செடி வளர்ப்பதற்கு உகந்த மண்ணாக இருப்பது களிமண் தான். செம்மண் நிலத்திலும் வளர்க்கலாம். மல்லிகைப்பூச் செடியை வளர்ப்பதற்கு தோட்டத்து மண் அல்லது செம்மண் இரண்டு மடங்கு, தொழு உரம் அல்லது மண்புழு உரம் அல்லது காய்கறி கழிவில் இருந்து தயாரிக்கப்பட்ட உரம் ஒரு மடங்கு, மணல் அல்லது தேங்காய்நார் ஒரு மடங்கு, வேப்பம் புண்ணாக்கு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலந்து ஏழு நாட்கள் வரைக்கும் அப்படியே விடவும். சிறிதளவு ஊற்றி ஈரப்பதத்தோடு வைத்து கொள்ளவும்.
7 நாட்கள் கழித்து செய்து வைத்துள்ள மண் கலவையில் மல்லிகைப் பூச்செடியை வைத்தால் அதிக பூக்கள் பூப்பதற்கு உதவியாக இருக்கும்.
3 நாட்களில் செம்பருத்தி செடி துளிர்விட்டு மொட்டுகள் வைக்க இதை ட்ரை பண்ணுங்க..!
உரம் | மொட்டுகள் அதிகம் வைக்க:
பூக்கள் அதிகம் பூப்பதற்கு புளித்த மோர் அல்லது தேமோர் கரைசல் வாரம் ஒரு முறை தெளித்து விடலாம்.
புளித்த மோர் தயாரிப்பது ஈபிடிபி என்று தெரியவில்லையா.! மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் புளிக்க மோரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுட 9 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு லிட்டர் புளித்த மோர் இருந்தால், ஒன்பது லிட்டர் தண்ணீர் கலந்து கொள்ளவும்.
பூக்கள் பூக்கும் தருணத்தில் புளித்த மோர் கரைசலை வாரத்தில் இரண்டு முறை இலைகள் மேல் தெளித்து வரலாம். இதனால் புளித்த மோரில் இருக்கும் அமிலத்தன்மை மல்லிகை பூச்செடியில் மொட்டுக்கள் வருவதற்கு உதவியாக இருக்கும்.
செம்பருத்தி செடியில் 7 நாட்களில் பூக்கள் தாறுமாறாக பூக்க இத Try பண்ணி பாருங்க…..
பூக்கள் அதிகமாக பூக்க:
மல்லிகை பூ செடியில் அதிக பூக்கள் பூப்பதற்கு வெங்காய கரைசல் உதவியாக இருக்கும். வெங்காய தோலை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி இரண்டு நாட்களுக்கு ஊற விடவும். தினமும் இந்த கரைசலை கலந்து விட வேண்டும்.
இரண்டு நாட்கள் கழித்து வெங்காய கரைசலை மல்லிகை பூச்செடி வேரில் ஊற்ற வேண்டும்.
வெங்காய தோல் கரைசலில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் அனைத்தும் மொட்டுகள் உதிராமல் பூக்கள் அதிகமாக பூப்பதற்கு உதவியாக இருக்கிறது.
மண்ணே இல்லாமல், 5 நாளில் கொத்தமல்லியை உங்க வீட்டிலேயே வளர்க்கலாம் ..
புதிதாக நட்ட ரோஜா செடிகள் சீக்கிரம் துளிர்விட இத பண்ணலாமா…
7 நாளில் மணி பிளான்ட் செடியை வீட்டிலேயே வேகமாக வளர இதை ட்ரை பண்ணுங்க
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |