மல்லிகை பூச்செடி வளர்க்கும் முறை
பூக்களை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது, ஏனென்றால் வீட்டில் காய்கறியை வளர்க்கா விட்டாலும் கட்டாயம் பூச்செடிகளை வளர்ப்பார்கள். அதிலும் பெண்களுக்கு இருக்கின்ற பூக்களிலே அதிகமாக பிடிக்க கூடியது மல்லிகை பூச்செடி தான். பூக்களை அதிகமாக பிடிப்பதால் பூச்செடிகளை வாங்கி வந்து வளர்ப்பார்கள். ஆனால் சில பூச்செடிகள் வளர்ந்து விடும், சில பூச்செடிகள் வளராது. இதற்கு என்ன தான் செய்வது என்று யோசிப்பதை விட அதிகமாக கவலை படுவார்கள். அதனால் தான் இந்த பதிவில் மல்லிகை பூச்செடியில் அதிக பூக்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மல்லிகை செடியை வளர்ப்பது எப்படி.?
மண் கலவை:
மல்லிகை செடியானது களிமண்ணில் நன்றாக வளர் கூடியது,. அதனால் நீங்கள் எடுத்து கொள்ளும் மண் இரண்டுமடங்கு, தொழு உரம் அல்லது மண்புழு உரம் அல்லது காய்கறி கழிவில் இருந்து தயாரிக்கப்பட்ட உரம் ஒரு மடங்கு, மணல் அல்லது தேங்காய்நார் ஒரு மடங்கு இவை எல்லாம் சேர்த்து 7 நாட்களுக்கு அப்படியே இருக்கட்டும்.
அதன் பிறகு மல்லிகை செடியை நட வேண்டும், இப்படி ஈரப்பதத்தோடு வைத்திருந்து அதன் பிறகு செடியை நடுவதன் மூலம் பூக்கள் அதிகமாக பூப்பதற்கு உதவி செய்கிறது.
ரோஜா செடியில் அதிக பூக்கள் பூப்பதற்கு எப்சம் சால்ட் மட்டும் போதும்..
பூக்கள் அதிகமாக பூக்க வெங்காய கரைசல்:
மல்லிகை பூச்செடியில் அதிக பூக்கள் பூப்பதற்கு வெங்காய கரைசல் உதவியாக இருக்கிறது. நீங்கள் சமையலுக்கு வெங்காயத்தை பயன்படுத்தும் போது அதனின் தோலை தூக்கி போடாதீர்கள்.
இந்த தோலை மூடியுள்ள ஒரு பாட்டிலில் சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். இதனை தினமும் கலக்கி விட வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து அதில் சிறிதள்வு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு மல்லிகை பூச்செடியில் வேர் பகுதியில் ஊற்ற வேண்டும்.
வெங்காயத்தோல் கரைசலில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் ஆனது மொட்டுகள் உதிரமலன் பூக்கள் பெரியதாகவும், அதிகமாகவும் பூப்பதற்கு உதவி செய்கிறது.
மாதுளை செடியிலேயே காய்கள் காய்க்க வாரம் 1 முறை இதை ட்ரை பண்ணி பாருங்க
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |