3 நாட்களில் குச்சியாக இருக்கும் மல்லிகை பூச்செடி கூட துளிர்விட்டு பூக்கள் பூத்து குலுங்க வாழைப்பூ மட்டும் போதும்..!

Advertisement

Malligai Poo Chedi Valarpu

நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து தாவரங்கள் வளர்ப்பதின் மீதான ஆர்வம் அதிகம் உள்ளது. அதிலும் குறிப்பாக இன்றைய கால கட்டத்தில் அனைவருமே தாவரங்கள் வளர்ப்பதில் அதிக  ஆர்வம் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பூச்செடிகள் வளர்பதில் அதிக அளவு ஆர்வம் கொண்டுள்ளனர். அப்படி நம்மில் பலராலும் விரும்பி வளர்க்கப்படும் பூச்செடிகளில் ஒன்று தான் மல்லிகை பூச்செடி. ஏனென்றால் பூக்களிலேயே மிகவும் விலை உயர்ந்ததும் மிகவும் வாசம் மிக்கதும் தான் இந்த மல்லிகை . அதனால் இதனை அனைவருக்கும் மிக மிக பிடிக்கும். அப்படி மல்லிகை பூச்செடியை விரும்பி வளர்ப்பவர்கள் அனைவருமே கூறுவது நான் எனது மல்லிகை பூச்செடியை நன்றாக தான் பராமரித்து கொள்கின்றேன். ஆனால் எனது பூச்செடிகளில் அதிக அளவு பூக்களே பூக்கவில்லை என்பது தான். அப்படி கவலைப்படுபவர்களுக்காக தான் இன்றைய பதிவில் மல்லிகை பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூக்க உதவும் குறிப்பினை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவை என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

வெறும் 10 நாட்கள் குண்டு மல்லி பூ செடி பூத்து குலுங்க இதை பற்றி பண்ணுங்க

மல்லிகை பூ செடி உரம்:

Malli Poo Chedi Valarpathu Eppadi

பொதுவாக பூக்கள் என்றாலே நாம் அனைவருக்குமே மிக மிக அதிகமாக பிடிக்கும். ஏனென்றால் பூக்களிடம் இருந்து வரும் வாசனை என்பது நாம் அனைவருக்குமே மிக மிக பிடிக்கும்.

அதனால் நமது வீடுகளில் பலவகையான பூச்செடிகளை வைத்து வளர்போம் அப்படி நாம் வளர்க்கும் பலவகையான பூச்செடிகளில் ஒன்று தான் இந்த மல்லிகை பூச்செடியும் ஒன்று.

அப்படி நாம் மிகவும் விரும்பி வளருக்கும் மல்லிகை பூச்செடியில் அதிக பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க..

குறிப்பிற்கு தேவையான பொருட்கள்:

  1. வாழைப்பூ – 1
  2. நன்கு புளித்த மோர் – 1 கப் 
  3. டீ தூள் – 1 கப் 
  4. சிகைக்காய் பொடி – 1/2 கப் 
  5. தண்ணீர் – 2 லிட்டர் 
  6. கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டில் – 1

ரோஜா செடி அதிக பூக்களுடன் பூத்து குலுங்க ஒரே ஒரு கிளாஸ் இதை ஊற்றுங்க போதும்

செய்முறை:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 வாழைப்பூவினை பொடி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள். நாம் எடுத்து வைத்துள்ள 1 கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் சேர்த்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் நன்கு புளித்த மோர், 1 கப் டீ தூள், 1/2 கப் சிகைக்காய் பொடி மற்றும் 2 லிட்டர் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து ஒரு வாரத்திற்கு நன்கு ஊறவிடுங்கள்.

இதனை அவ்வப்பொழுது எடுத்து லேசாக கலந்துவிடுங்கள். ஒருவாரத்திற்கு பிறகு இதில் உள்ள சாற்றினை மட்டும் நன்கு வடிகட்டி கொள்ளுங்கள். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து உங்கள் வீட்டில் உள்ள மல்லிகை பூச்செடிகளில் ஊற்றி கொள்ளுங்கள்.

இதனை வாரம் இருமுறை அல்லது மூன்று முறை என தொடர்ந்து ஊற்றி வருவதன் மூலம் உங்களின் மல்லிகை பூச்செடி நன்கு பூத்து குலுங்குவதை நீங்களே காணலாம்.

தண்ணீர் இருந்தால் போதும்.. வீட்டில் வெந்தய கீரை வளர்க்கலாம்…மண் தேவையே இல்ல ..

மல்லிகைப்பூ செடியில் 10 நாட்களில் பூக்கள் பூத்து குலுங்க இதை ட்ரை பண்ணுங்க

10 நாளில் பூக்காத ரோஜா செடியினையும் பூக்க வைப்பதற்கு இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement