மல்லிகை பூச்செடியில் பூச்சிகள் வராமல் இருக்க மாதத்தில் 1 நாள் இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

மல்லிகை செடி பூச்சி விரட்டி

நாம் நேரில் பூக்களை பார்த்து ரசிப்போம். ஏன் ஒரு சிலருக்கு பூக்களை பார்த்தவுடன் தலையில் வைக்க வேண்டும் என்று தோன்றும். ஏனென்றால் பூக்களின் அழகு என்பது அந்த அளவிற்கு இருக்கும் என்பது தான் உண்மை. இவ்வாறு பூக்களை நாம் மேலோட்டமாக பார்த்து ரசித்தாலும் கூட அதனை வளர்ப்பதற்கு மட்டும் கஷ்டம் என்பது மிகவும் பெரிதானது. இதன் படி பார்க்கையில் ஒரு செடி செழிப்பாக வளர்ந்து வந்தாலும் கூட அதில் பூச்சிகளின் தொல்லையில் எப்படியாவது சிக்கி விடுகிறது. இவ்வாறு பூச்சிகளின் தொல்லை ஏற்படும் போது பூக்கள் அதிகமாக பூக்காது, மேலும் செடிகளில் இலைகளும் இருக்காது. ஆகவே இன்றைய பதிவில் பூக்களில் ஒன்றான மல்லிகைப்பூ செடியில் பூச்சிகளை எப்படி விரட்டுவது என்பதை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மல்லிகை செடியை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க டிப்ஸ்:

மல்லிகை பூச்செடியினை பூச்சிகள் தாக்காமல் இருக்க (அ) முன்பே பூச்சிகள் தாக்கி இருந்தாலும் அதனை சரி செய்ய முதலில் ஒரு கரைசலை தயார் செய்ய வேண்டும்.

தேவையான பொருட்கள்:

  • நாட்டு சர்க்கரை- 1 கப்
  • பழுத்த வாழைப்பழம்- 3
  • புளித்த மோர்- 1/2 லிட்டர்
  • பெருங்காயத்தூள்- 2 ஸ்பூன்
  • அரிசி கழுவிய தண்ணீர்- 1/2 லிட்டர்
  • சாதம் வடித்த தண்ணீர்- 1/2 லிட்டர்

மோர்

 

முதலில் ஒரு பாத்திரத்தில் புளித்த மோர், அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் சாதம் வடித்த தண்ணீர், 2 ஸ்பூன் பெருங்கத்தூள் என இவற்றை எல்லாம் நன்றாக கலந்து 2 நாட்கள் வரை வெயிலில் வைத்து விடுங்கள்.

அதன் பிறகு 2 நாட்கள் கழித்து 5 பழுத்த வாழைப்பழம் மற்றும் 1 கப் சர்க்கரையினை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். இப்போது இத்தகைய கலவையை வாலியில் வைத்துள்ள தண்ணீருடன் சேர்த்து கலந்து ஒரு வாரம் வரை அப்படியே வைத்து விடுங்கள்.

1 வாரம் இதனை பார்த்தால் பொட்டாசியம், கால்சியம் மற்றும் நுண்ணுயிர் சத்துக்கள் நிறைந்த கரைசல் தயார்.

பயன்படுத்தும் முறை:

மல்லிகைநீங்கள் தயார் செய்து வைத்துள்ள கரைசலில் இருந்து 1/2 லிட்டர் எடுத்துக்கொண்டு அதனை பத்து லிட்டர் தண்ணீருடன் கலந்து பூச்செடிகளுக்கு உரமாக ஊற்ற வேண்டும்.

 

இவ்வாறு நீங்கள் செய்தால் போதும் செடிகளில் பூச்சிகளின் தொல்லை நீங்குவதோடு மட்டும் இல்லாமல் செடிகளுக்கு ஊட்டச்சத்தினை அளித்து அதிக பூக்களையும் பூக்க செய்யும்.

1 கப் நாட்டுச்சர்க்கரை போதும் பூக்காத முல்லை பூச்செடியும் தாறுமாறாக பூக்கள் பூக்கும் 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement