Malligai Poo Chediyil Pookal Pooka Tips
பொதுவாக பூக்கள் என்றாலே ஒரு வாசனை தன்மை கொண்டது என்று நமக்கெல்லாம் தெரியும். அந்த வகையில் பார்த்தால் பூக்களை பெரும்பாலும் பெண்கள் மற்றும் கோவிலில் உள்ள சிலைகளுக்கு தான் அதிகமாக சூட்டப்படுகிறது. அப்படி பார்க்கையில் மதுரை என்றாலும் பெண்கள் என்றாலும் முதலில் அனைவரது மனதிலும் தோன்றுவது மல்லிகை பூ செடி தான். ஏனென்றால் இவை இரண்டிலும் மல்லிகை பூ அதிக சிறப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. அதனால் பெரும்பாலான மக்கள் மல்லிகை பூ வினை விரும்பி வீட்டிலேயே வளர்த்து வருகிறார்கள். மல்லிகை பூ செடி வளர்ப்பது என்பது சாத்தியமான ஒன்றாக இருந்தாலும் கூட அதில் நிறைய பூக்களை பூக்க வைப்பது என்பது சற்று கடினம். ஆகவே இன்று மல்லிகை பூ செடியில் பூக்கள் பூத்து குலுங்க என்ன செய்வது என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மல்லிகை பூ செடியில் பூக்கள் அதிகம் பூக்க புளித்த தோசை மாவு டிப்ஸ்:
மல்லிகை பூ செடி மட்டும் இல்லாமல் வேறு ஏதேனும் செடிகளை வளர்த்து வந்தாலும் கூட சரியான மண் கலவையை தயாரிக்க வேண்டும். ஏனென்றால் மண் கலவை சரியாக இருந்தால் மட்டுமே செடி நன்றாக வளர ஆரம்பிக்கும்.
அதன் பிறகு செடியின் வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க அதில் பூக்கள் பூக்க சில நடைமுறைகளை செய்ய வேண்டும். அதற்கு முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருளை எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
- தண்ணீர்- 3 முதல் 4 லிட்டர் வரை
- புளித்த தோசை மாவு- 50 முதல் 70 மில்லி
மேலே சொல்லப்பட்டுள்ள முறையின் படி பார்க்கையில் உங்களிடம் தோசை மாவு இல்லை என்றால் புதிதாக அரைக்கும் தோசை மாவினை அப்படியே பிரிட்ஜில் வைக்கலாம் வெளியே வைத்து விட்டால் போதும் புளித்து விடும்.
இப்போது எடுத்துவைத்துள்ள தண்ணீர் மற்றும் புளித்த மாவினை நன்றாக கலந்து வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களுடைய தோட்டத்தில் இருக்கும் மல்லிகை பூ செடிக்கு வாரம் 3 முறை என 1 கிளாஸ் ஊற்ற வேண்டும்.
இவ்வாறு நீங்கள் புளித்த மாவு தண்ணீரை ஊற்றுவதன் மூலம் நுண்ணுயிர்ச்சத்து அதிகரித்து பூக்கள் அதிகமாக பூக்கும்.
அதேபோல் இந்த தண்ணீரை ஊற்றுவதற்கு முன்பாக வேறு எந்த தண்ணீரையும் ஊற்றக்கூடாது. மேலும் இந்த தண்ணீரை வெயில் அதிகமாக இல்லாத போது மட்டுமே ஊற்ற வேண்டும்.
இத்தகைய முறையை மட்டும் நீங்கள் செய்தால் போதும் 1 வாரத்தில் செடியில் அதிகம் பூக்கும்.
ரோஜா செடி வேகமாக அதுவும் 5 நாட்களில் துளிர் விட செய்ய வேண்டிய டிப்ஸ்
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |