7 நாட்களில் ஒரே செடியில் நிறைய மல்லிகை பூ பூக்க இதை மட்டும் செய்யுங்க..!

Advertisement

Malligai Poo Niraya Pooka Enna Seivathu

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவில் ஒரே மல்லிகைப்பூ செடியில் எண்ணற்ற பூக்கள் பூத்து குலுங்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். நம்மில் பலரது வீட்டில் மல்லிப்பூ செடி என்பது இருக்கும். ஆனால் அதில் நாம் எதிர்பார்த்த அளவிற்க்கு பூக்கள் என்பது பூக்காது. அதிலும் ஒரு சிலரது வீட்டில் வாங்கிய வைத்த மல்லிகை பூ செடியில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கும். ஆகையால் இன்று பூக்காத மல்லிகை பூ செடி மற்றும் ஒரே செடியில் நிறைய பூக்கள் பூக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மல்லிகை பூ அதிகமாக பூக்க டிப்ஸ்:

பூக்காத மல்லிகை பூ செடி மற்றும் ஒரே செடியில் எண்ணற்ற மல்லிகை பூ பூப்பதற்கு முதலில் நாம் கரைசல் ஒன்று தயாரிக்க வேண்டும். அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருளை எடுத்துக்கொள்ளுங்கள்.

  • முருங்கை இலை
  • மாட்டுச்சாணம்
  • சீதாமர இலை
  • வாழைப்பழத்தோல்
  • தண்ணீர்மல்லிகை பூ அதிகமாக பூக்க

இப்போது ஒரு பெரிய வாலியில் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை சிறிதளவு அனைத்தினும் எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் 20 லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி 3  நாட்கள் வரை ஊறவைத்து விடுங்கள்.

3 நாட்களில் கொத்தமல்லி நன்கு தள தளவென செழித்து வளர இதை 1 கிளாஸ் ஊற்றுங்கள் போதும்

3 நாட்கள் கழித்த பிறகு உங்களுக்கு தேவையான கரைசல் கிடைத்து விடும். அதன் பிறகு 1 செடிக்கு 1 லிட்டர் கரைசல் என கொடுங்கள். இத்தகைய கரைசல் கொடுத்த இரண்டு நாட்கள் பிறகு சாதாரணமான தண்ணீரை ஊற்றுங்கள்.

இந்த தண்ணீரை மல்லிகை பூ செடிக்கு கொடுப்பதன் மூலம் செடிக்கு தேவையான நுண்ணுயிர் ஊட்டச்சத்து, நைட்ரஜன், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து என இவை அனைத்தும் கிடைத்து செடிகளில் பூக்கள் போது குலுங்க ஆரம்பிக்கும்.

மேலும் இந்த கரைசலில் ஊற்றிய பிறகு இருக்கும் தோலினை செடிக்கு அருகில் குழி பறித்து அதனை போட்டு மூடி விடுங்கள்.

வீட்டு தோட்டத்தில் கொத்துக் கொத்தாக கொத்தவரங்காய் காய்க்க சில Tips….

ஓமவல்லி செடி 5 நாட்களில் வேகமாகவும், செழிப்பாகவும் வளர Simple டிப்ஸ் ட்ரை பண்ணுங்க 

3 நாளில் குண்டு மல்லி பூ செடி துளிர் விட்டு பூக்கள் பூக்க இதை ட்ரை பண்ணுங்க 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement