Malligai Poo Sedi Athiga Pookal Pooka Tips in Tamil
நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து தாவரங்கள் வளர்ப்பதின் மீதான ஆர்வம் அதிகம் உள்ளது. அதிலும் குறிப்பாக இன்றைய கால கட்டத்தில் அனைவருமே தாவரங்கள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பூச்செடிகள் வளர்பதில் அதிக அளவு ஆர்வம் கொண்டுள்ளனர். அப்படி நம்மில் பலராலும் விரும்பி வளர்க்கப்படும் பூச்செடிகளில் ஒன்று தான் மல்லிகை பூச்செடி. ஏனென்றால் பூக்களிலேயே மிகவும் விலை உயர்ந்ததும் மிகவும் வாசம் மிக்கதும் தான் இந்த மல்லிகை . அதனால் இதனை அனைவருக்கும் மிக மிக பிடிக்கும். அப்படி மல்லிகை பூச்செடியை விரும்பி வளர்ப்பவர்கள் அனைவருமே கூறுவது நான் எனது மல்லிகை பூச்செடியை நன்றாக தான் பராமரித்து கொள்கின்றேன். ஆனால் எனது பூச்செடிகளில் அதிக அளவு பூக்களே பூக்கவில்லை என்பது தான். அப்படி கவலைப்படுபவர்களுக்காக தான் இன்றைய பதிவில் மல்லிகை பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூக்க உதவும் குறிப்பினை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவை என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மல்லிகை பூ அதிகமாக பூக்க:
நாம் அனைவருக்கும் மிக மிக பிடித்த பூக்கள் வகைகளில் ஒன்று தான் இந்த மல்லிகை பூ. அதனால் இதனை நாம் அனைவருமே நமது வீடுகளில் உள்ள தோட்டத்திலும் மாடித்தோட்டத்திலும் இந்த மல்லிகை பூச்செடிகளை மிகவும் விரும்பி வளர்ப்போம்.
அப்படி நாம் மிகவும் விரும்பி வளருக்கும் மல்லிகை பூச்செடியில் அதிக பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- எலுமிச்சை பழத்தோல் – 10
- வாழைப் பழத்தோல் – 4
- முட்டை ஓடு – 5
- எப்சோம் உப்பு – 1 டீஸ்பூன்
- தண்ணீர் – 5 லிட்டர்
- ஸ்ப்ரே பாட்டில் – 1
காய்ந்த முல்லை பூச்செடியிலும் கிலோக்கணக்கில் பூக்கள் பூக்க Easy-யான டிப்ஸ்
செய்முறை:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 10 எலுமிச்சை பழத்தோல் மற்றும் 4 வாழைப் பழத்தோல் ஆகியவற்றை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். பிறகு இதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 5 முட்டை ஓட்டினையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். பிறகு இதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் எப்சோம் உப்பு மற்றும் 5 லிட்டர் தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து ஒரு வாரம் நன்கு ஊறவிடுங்கள்.
பயன்படுத்தும் முறை:
அதன் பிறகு இதில் உள்ள தண்ணீரை மட்டும் வடிகட்டி ஸ்ப்ரே பாட்டிலில் சேர்த்து உங்க வீட்டில் உள்ள மல்லிகை பூச்செடியின் வேர்களில் ஸ்ப்ரே சேது கொள்ளுங்கள். இதனால் உங்க வீட்டில் உள்ள மல்லிகை பூச்செடி கிலோ கணக்கில் பூக்க ஆரம்பிக்கும்.
ஒரே ரோஜா செடியில் நிறைய பூக்கள் பூக்க என்ன பண்ணனும் தெரியுமா…
புதிதாக நட்ட ரோஜா செடிகள் சீக்கிரம் துளிர்விட இத பண்ணலாமா…
தண்ணீர் இருந்தால் போதும்.. வீட்டில் வெந்தய கீரை வளர்க்கலாம்…மண் தேவையே இல்ல ..
7 நாட்களிலே பூக்காத மல்லிப்பூ செடியும் துளிர்விட்டு பூக்கள் பூக்க இதை மட்டும் செய்யுங்க
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |