பட்டுப்போன மல்லிகை பூ செடியும் துளிர் விட்டு மொட்டு வைக்க என்ன செய்வது..?

Advertisement

மல்லிகை பூ செடி துளிர் விட

பூக்களில் எண்ணற்ற வகைகள் இருந்தாலும் கூட அதில் பெரும்பலானோருக்கு மல்லிகை பூ தான் அதிகமாக பிடிக்கிறது. அந்த வகையில் பார்த்தால் கடைகளில் விற்கும் மல்லிகை பூவிற்கு, வீட்டில் பூக்கும் மல்லிகை பூவிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். ஆனால் வீட்டில் நாம் வளர்த்து வரும் மல்லிகை பூ ஆனது பெரும்பாலும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு துளிர் விடாமல் அப்படியே காய்ந்து போய்விடுகிறது. இவ்வாறு வந்தால் நாம் எந்த விதமான பராமரிப்பினையும் செய்யாமல் அப்படியே விட்டு விடுகிறோம். அதனால் இன்று பட்டுப்போன மல்லிகை பூ செடியும் துளிர் விட்டு அதிகமாக பூக்கள் பூக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் அதிகமாக தெரிந்துக்கொள்ள போகிறோம். ஆகையால் உங்களுடைய வீட்டிலும் மல்லிகை பூ செடி இருந்தால் இதனை செய்யுங்கள்.

கருவேப்பிலை செடி மரமாக மாற இதை மட்டும் செய்யுங்க போதும்..

மல்லிகை பூ செடி வளர்ப்பு முறை:

மல்லிகை பூ செடியினை நீங்கள் வெயில் படாதா இடத்தில் வைத்தீர்கள் என்றால் அது அதிகமாக துளிர் விடாது. அதனால் மிதமான அளவிற்கு வெயில் படும் இடத்தில் இதனை வைத்து விடுங்கள்.

அதேபோல் மூன்று நாட்களுக்கு ஒரு முறை என தண்ணீர் கண்டிப்பாக அளித்து வாருங்கள். இவ்வாறு தண்ணீர் கொடுப்பதன் மூலம் செடிகள் வாடி போகாமல் இருக்கும்.

  • பழக்கழிவுகள்
  • காய்கறி கழிவுகள்

பழக் கழிவுகள்

ஒரு பானையில் இத்தகைய இரண்டு கழிவுகளையும் அதில் சேர்த்து நன்றாக மூடி வைத்து விடுங்கள். இவ்வாறு மூடி வைத்த கழிவுகளை 7 நாட்களுக்கு பிறகு இந்த கழிவில் இருந்து கிடைக்கும் கரைசலை எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்போது உங்களுக்கு எவ்வளவு அளவு காய்கறி கழிவு தண்ணீர் கிடைக்கிறதோ அதில் 3 பங்கு அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

7 நாட்கள் போதும் உங்கள் வீட்டு தோட்டத்தில் பசுமையான வெந்தய கீரை துளிர்விட…

மல்லிகை பூ செடி வளர்ப்பு முறை

பின்பு கடைசியாக இந்த தண்ணீரை வாடிப்போன மல்லிகை பூ செடிகளுக்கு ஊற்றி வாருங்கள். இவ்வாறு 3 நாட்களுக்கு ஒரு முறை ஊற்றுவதன் மூலம் செடி நன்றாக துளிர் விட்டு செழித்து வளரும்.

இவை இல்லாமல் தினமும் நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தி விட்டு கீழே போடும் வெங்காயம் மற்றும் பூண்டு தோளினையும் அதற்கு கொடுப்பதன் மூலம் மல்லிகை பூ செடிக்கு சத்துக்கள் அதிகமாக கிடைக்கும்.

புதிதாக நட்ட ரோஜா செடிகள் சீக்கிரம் துளிர்விட இத பண்ணலாமா…

செம்பருத்தி செடியில் 7 நாட்களில் பூக்கள் தாறுமாறாக பூக்க இத Try பண்ணி பாருங்க…..

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement