மல்லிகை பூ செடி
மல்லிகை பூ என்பது நமக்கு பிடித்த ஒன்றாக இருப்பதனால் வீட்டிலேயே நாம் பெரும்பாலும் இதனை வாங்கி வளர்த்து வருகிறோம். ஆனால் கடையில் நாம் பார்க்கும் போது அழகாக இருக்கும் மல்லிகை பூ செடி வீட்டிற்கு வாங்கி வந்து பார்த்தால் வாடி மற்றும் பூக்கள் பூக்காமல் இருப்பது போல தோன்றும். அதனால் இன்று பூக்காத மல்லிகை பூ செடியிலும் பூக்கள் பூக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: 👇https://bit.ly/3Bfc0Gl |
மல்லிகை பூ செடி வளர்ப்பு:
பூக்காத மல்லிகை பூ செடியிலும் பூக்கள் பூப்பதற்கு வெந்தயம் ஒன்று போதும். ஆகையால் வெந்தயத்தை வைத்து கரைசல் தயாரித்து செடிகளுக்கு கொடுப்பதன் மூலம் செடி நன்றாக வளர்ந்து பூக்கள் பூக்க ஆரம்பித்து விடும்.
- வெந்தயம்- 3
- டீத்தூள்- 5 கைப்பிடி அளவு
- வெங்காயத்தோல்- 1 கைப்பிடி அளவு
முதலில் 3 ஸ்பூன் வெந்தயத்தை மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் எதுவும் இல்லாமல் பவுடர் போல அரைக்க வேண்டும்.
பூக்காத சாமந்தி பூச்செடியையும் கிலோ கணக்கில் பூக்க வைப்பதற்கு இந்த ஒரு பொடி போதும்
அதன் பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் அளவு தண்ணீர் வைத்து அதில் எடுத்துவைத்துள்ள பொருட்கள் அனைத்தினையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.
பின்பு கரைசல் நன்றாக கொதித்த பிறகு அதனை அப்படியே மூடி வைத்து விடுங்கள். ஒரு 10 மணி நேரம் கழித்த பிறகு தயார் செய்து வைத்துள்ள கரைசலை வடிகட்டி கொள்ளுங்கள்.
செடிக்கு கரைசல்:
கடைசியாக கரைசலை 5 லிட்டர் தண்ணீருடன் கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்த கரைசலை வாரம் 3 முறை என இலை மற்றும் வேர் வழியாக இந்த கரைசலை செடிக்கு கொடுக்கலாம்.
இத்தகைய கரைசலில் ஹைட்ரஜன் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் சத்து இருப்பதனால் இது மல்லிகை பூ செடியினை நன்றாக வளர செய்து பூக்காத செடியினையும் பூக்க வைத்து விடும்.
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |