மல்லிகை பூச்செடியில் அதிக பூக்கள் பூக்க வெங்காயம் மட்டும் போதும்..

Advertisement

மல்லிகை பூ அதிகமாக பூக்க

பூக்களை பிடித்தகாதவர்கள் என்று யாரும் இல்லை. எல்லாருக்குமே பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். எந்த செடி இருக்கிறதோ இல்லையோ ஏதாவதொரு பூச்செடிகளை கண்டிப்பாக வளர்ப்பார்கள். அதில் ஒன்று தான் மல்லி பூ. இந்த பூவின் வாசனை மன அமைதியை தர கூடியதாக இருக்கும். இந்த செடியை பலரும் வீட்டில் வைத்திருப்பார்கள். ஆனால் சிலரது வீட்டில் மல்லிகை செடி வளர்ந்திருக்கும். ஆனால் அதில் பூக்கள் வந்திருக்காது. இதற்கு என்ன தான் செய்வது என்று பலரும் யோசிப்பார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் மல்லிகை பூச்செடியில் அதிகமாக பூக்கள் அதிகமாக வைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெறித்து கொள்ளவோம் வாங்க..

மல்லிகை செடியில் பூக்கள் அதிகமாக பூக்க:

மண் கலவை:

மல்லிகை பூச்செடிக்கு ஏற்ற மண் களிமண், செம்மண் இந்த இரண்டு மண்ணில் வளர்ப்பது சிறந்தாக இருக்கும். இதை மண்ணில் தொழு உரம், மண்புழு உரம், காய்கறி கழிவு, தேங்காய் நார் போன்றவற்றை சேர்க்க வேண்டும்.

வாழைத்தார்களில் அதிக காய்கள் காய்க்க இதை மட்டும் ஊற்றுங்கள் போதும் 

உரமாக புளித்த மோர் கரைசல்:

புளித்த மோர் கரைசல்

புளித்த மோர் கரைசலை மல்லி செடிக்கு பயன்படுத்துவதால் பூக்கள் அதிகமாக பூக்கும். இதற்கு நீங்கள் 3நாட்கள் அல்லது 5 நாட்கள் புளித்த மோரை எடுத்து கொள்ள வேண்டும். இதில் 9 மடங்கு தண்ணீரை ஊற்ற வேண்டும். 1/2 லிட்டர் மோர் இருந்தால் அதில் 18 லிட்டர் தண்ணீர் ஊற்ற வேண்டும். இதனை மல்லி செடியில் மொட்டுகள் வைக்கும் நேரத்திற்கு முன்பாக செடியில் தெளிக்க வேண்டும். புளித்த மோரில் இருக்கும் அமிலத்தன்மை மொட்டுகள் வைப்பதற்கு உதவியாக இருக்கிறது.

பூக்கள் அதிகமாக பூக்க வெங்காய கரைசல்:

பூக்கள் அதிகமாக பூக்க வெங்காய கரைசல்

வெங்காய கரைசலானது மல்லிகை செடியில் அதிக பூக்கள் பூப்பதற்கு உதவி செய்கிறது. இதற்கு நீங்கள் மூடியுள்ள ஒரு பாட்டிலை எடுத்து கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் வெங்காய தோலை சேர்த்து இரண்டு நாட்களுக்கு ஊற வைக்கவும். இந்த கரைசலில் தண்ணீரை கலந்து மல்லிகை செடியின் வேர் பகுதியில் ஊற்ற வேண்டும். வெங்காய கரைசலில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, காப்பர் போன்ற சத்துக்கள் உள்ளது. இந்த சத்துக்கள் மொட்டுகள் உதிராமல் பூக்கள் அதிகமாக பூக்க செய்கிறது.

பலா மரத்தில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்க இதை மட்டும் ஊற்றுங்கள் போதும்

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

Advertisement