வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மாதுளை செடியிலேயே காய்கள் காய்க்க வாரம் 1 முறை இதை ட்ரை பண்ணி பாருங்க..!

Updated On: October 21, 2023 8:13 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Mathulai Chediyil Athiga Kaigal Kaika

நாம் அன்றாடம் சாப்பிடும் சாப்பாட்டினை விட காய்கறிகள் மற்றும் பழங்களில் தான் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக மாதுளை, பப்பாளி என இதுபோன்ற பழங்களில் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் பல அடங்கியுள்ளது. ஆகையால் இதனை நாம் காசு கொடுத்து வாங்குவதை விட வீட்டிலேயே வளர்ப்பது நல்லது என்று தான் பலரும் யோசிப்பார்கள். அதனால் பலர் வீட்டிலேயே மாதுளை செடியினையும் வாங்கி வளர்ப்பார்கள். ஆனால் அது நன்றாக செழிப்பாக வளர்ந்தாலும் கூட நிறைய காய்கள் காய்ப்பது இல்லை. அதனால் இன்று மாதுளை செடியில் நிறைய பூக்கள் மற்றும் காய்கள் காய்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மாதுளை அதிகமாக காய்க்க டிப்ஸ்:

நீங்கள் எந்த செடி மற்றும் மரத்தினை நடவு செய்தாலும் அதற்கு முதலில் மண் கலவையை தயார் செய்து கொள்வது நல்லது. ஏனென்றால் அப்போது தான் செடி விரைவில் வேகமாக வளர ஆரம்பிக்கும்.

ஆகையால் மண் கலவை தயார் செய்து நீங்கள் மாதுளை செடியை வளர்த்தாலே போதும் செடி நன்றாக வளரும்.

  • சாம்பல்- 200 கிராம்
  • வேப்பம் புண்ணாக்கு கரைசல்- 1/2 லிட்டர்
  • மண்புழு உரம்- 1 கிலோ
  • Animeal உரம்- 1 கிலோ

மாதுளை அதிகமாக காய்க்க

இப்போது ஒரு பாத்திரத்தில் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தினையும் அதில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின்பு உங்களுடைய வீட்டில் இருக்கும் மாதுளை செடிக்கு அருகில் 1 1/2 அடி தூரத்தில் ஒரு குழியை நொண்டி கொள்ளுங்கள்.

அதன் பிறகு அத்தகைய குழியில் கலந்து வைத்துள்ள உரத்தினை அதில் போட்டு நன்றாக மண் போட்டு மூடி விடுங்கள். பின்பு அதன் மேலே தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.

இதனை தொடர்ந்து 1 கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்கு மற்றும் கடலை புண்ணாக்கு தண்ணீர் சேர்த்து 5 நாட்கள் வரை அப்படியே ஊற வைத்து விடுங்கள். 5 நாட்கள் கழித்து அந்த தண்ணீரை செடிக்கு ஊற்றி வாருங்கள்.

உங்களது வீட்டில் இருக்கும் மாதுளை செடிக்கு இதை மட்டும் செய்தால் போதும் செடி நன்றாக துளிர் விட்டு காய்கள் அதிகமாக காய்க்க ஆரம்பிக்கும். மேலும் உங்களுடைய வீட்டில் இருக்கும் மாதுளை செடிக்கு ஏற்றவாறு பொருட்களை எடுத்துகொள்ளுங்கள்.

கறிவேப்பிலை செடி வேகமாக வளரவும், இலைகள் பெரிதாகவும் இருக்க இதை ட்ரை பண்ணுங்க 

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now