Milagai Sedi Athigam Kaika Tips in Tamil
பொதுவாக நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து இந்த உலகில் நம்முடன் இணைந்து வாழ்கின்ற விலங்குகள் மற்றும் தாவர வகைகளின் மீது நமக்கு அதீத ஆசை மற்றும் பாசம் உள்ளது அதனால் நாம் அனைவருமே நமது வீடுகளில் சிறிய அளவிலான தோட்டம் அல்லது மாடி தோட்டத்தை அமைத்து அதில் நமக்கு பிடித்த மற்றும் நமக்கு பயனுள்ள பலவகையான தாவரங்களை வளர்த்து வருகின்றோம். அப்படி நாம் அனைவரின் வீட்டில் உள்ள தோட்டங்களில் கண்டிப்பாக இடம் பெற்றுள்ள ஒரு செடி என்றால் அது பச்சை மிளகாய் செடி தான். அப்படி நாம் மிகவும் விருப்பப்பட்டு வளர்க்கும் பச்சை மிளகாய் செடியில் ஏதாவது ஒரு பூச்சி தாக்குதல் ஏற்பட்டு அது சரியாக காய்க்கவில்லை என்றால் நமக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் இன்று பச்சை மிளகாய் செடியில் உள்ள பூச்சித்தாக்குதலை நீக்கி அதிக அளவு காய்க்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
செம்பருத்தி செடியில் எறும்புகள் வராமல் இருக்க இதை மட்டும் ஊற்றுங்கள் போதும்
Natural Fertilizer for Green Chilli Plant in Tamil:
நமது உணவில் காரா சுவையை அளிக்க பயன்படும் இந்த பச்சை மிளகாயை அனைவரும் தங்களின் வீட்டில் வளர்ப்பார்கள். ஆனால் அது அதிக அளவு காய்கள் காய்க்க வில்லை என்றால் நமக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.
அதனால் பச்சை மிளகாய் செடி அதிக அளவு காய்கள் காய்க்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி இங்கு விரிவாக காணலாம் வாங்க..
குறிப்பிற்கு தேவையான பொருட்கள்:
- காய்கறி கழிவு – 2 கைப்பிடி அளவு
- நன்கு புளித்த மோர் – 1 லிட்டர்
- தேங்காய் பால் – 1 லிட்டர்
- பெருங்காய தூள் – 4 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – 4 லிட்டர்
பூக்கவே பூக்காத செம்பருத்தி செடியிலும் கூடை கூடையாக பூக்கள் பூக்க வேர்க்கடலை மட்டும் போதும்
பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 லிட்டர் நன்கு புளித்த மோரை ஊற்றி அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 4 லிட்டர் தண்ணீரையும் ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள்.
தேங்காய் பாலினை கலக்கவும்:
அடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 லிட்டர் தேங்காய் பாலினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
காய்கறி கழிவினை சேர்க்கவும்:
அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு காய்கறி கழிவினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பூக்காத ரோஜா செடியிலும் அதிக பூக்கள் பூத்து குலுங்க ஒரே 1 கிளாஸ் இதை ஊற்றுங்கள் போதும்
பெருங்காயத்தூளினை கலந்து கொள்ளவும்:
இறுதியாக அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூளினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை ஒரு வாரத்திற்கு அப்படியே விடுங்கள்.
ஒரு வாரம் கழித்து இந்த கலவையை எடுத்து இதில் ஒன்பது மடங்கு தண்ணீரை சேர்த்து உங்களின் மிளகாய் செடிகளுக்கு ஊற்றுங்கள். இதனை தொடர்ந்து ஊற்றி வருவதன் மூலம் உங்களின் மிளகாய் செடியில் உள்ள பூச்சி தாக்குதல் அனைத்தையும் நீங்கி அதிக காய்கள் காய்ப்பதை நீங்களே காணலாம்.
பூக்காத முல்லை பூச்செடியும் இதை ஒரு முறை ஊற்றினால் காடு போல் பூக்கும்
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |